என்னது அந்தப் படத்துல 38 கெட்ட வார்த்தைகளா? அடப்பாவமே.. இப்படியா படம் எடுப்பாரு பார்த்திபன்?

by sankaran v |
என்னது அந்தப் படத்துல 38 கெட்ட வார்த்தைகளா? அடப்பாவமே.. இப்படியா படம் எடுப்பாரு பார்த்திபன்?
X

தமிழ்த்திரை உலகைப் புரட்டிப் போட்டு புதிய பாதையை அமைத்துக் கொடுத்தவர்கள் பலர் இருந்தாலும் அதில் குறிப்பிடத்தக்கவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். அதனால்தானோ என்னவோ தனது முதல் படத்துக்கே புதிய பாதை என்று பெயர் வைத்துள்ளார். இவர் தனது ஆரம்பகால திரையுலக அனுபவங்கள் குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

எந்த விஷயத்தைப் பற்றியும் சுவையாகச் சொல்பவர் பார்;த்திபன். தன் சொந்த விஷயம் பற்றியும், சினிமா குறித்தும் சுவையான பல விஷயங்களைச் சொல்கிறார் நடிகர் பார்த்திபன்.

ரொம்ப நல்ல பெயர்: புதிய பாதை படம் ஆரம்பிக்கும்போது ரொம்ப பயம் இல்லை. நிறைய பயத்தைக் கடந்துட்டேன். பாக்கியராஜ் சாருக்கிட்ட அசிஸ்டண்ட்டா இருந்து ரொம்ப நல்ல பெயர் வாங்கினேன். இவரு மட்டும் நாளைக்கு சினிமாவுக்கு வந்தாருன்னா அப்படிலாம் சொல்லி அதுலயும் நிறைய மூக்கு உடைபட்டு இருக்கேன்.

சில தடைகள்: திரும்ப வந்து அப்புறம் புதிய பாதை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நல்ல தயாரிப்பாளர் சுந்தரம் சார் மாதிரி ஒருத்தர் கையில போயிடுச்சு. அதனால என்னுடைய வேலை அதை எப்படி தயாரிக்கலாம்கறதுல மட்டும்தான் இருந்தது. அதுல சில தடைகள் இருக்கும். கதாநாயகியோட டேட்ஸ் கிடைக்காது.

அந்தக் குறிப்பிட்ட நாளைக்குள்ள எப்படி எடுத்து முடிக்கிறதுன்ற சேலஞ்ச் இருந்தது. அதே நேரம் ஒரு டயலாக்கைக் கூட இன்னொரு தடவை மாத்தி எடுத்துக்கலாமான்னு குழப்பமே வரல. நான் நடிச்சிட்டு நானே கட் சொல்லிட்டுப் போயிடுவேன். அதுல அவ்ளோ நம்பிக்கை இருந்தது. எனக்கு எந்தவிதமான தயக்கமும் கிடையாது.

38 லட்சம்: படம் ரிலீஸ் வரைக்குமே எந்த தயக்கமும் இல்லை. ஆனா இன்னொருவருடைய பணம். கிட்டத்தட்ட 38 லட்சம் போட்டுருக்காங்க. இந்தப் படம் என்னவா மாறும்? மாறினா தான் என்ன? ஏன்னா என்னை யாருக்கும் தெரியாது. நம்ம பாட்டுக்கு ரோட்டுல இறங்கி நடந்து போயிடலாம். புதிய பாதையில நான் சாதிச்சது என்னன்னா எல்லா வர்க்கத்தினரையும் திருப்திப்படுத்த முடிந்தது. குறிப்பா குடும்பம், பெண்கள் எல்லாருமே.

சூட்டிங்கை நிறுத்திடுவாரு: புதிய பாதை படம் பார்த்தவங்க எல்லாம் நல்லாருக்குன்னாங்க. அதுல ஒண்ணு ரெண்டு காமெடியான விஷயங்களும் இருக்கும். முக்கியமா புரொடக்ஷன் மேனேஜர் எல்லாரும் படத்துல பேண்டுக்குப் பதிலா லுங்கி கட்டிட்டு நடிக்கிறாரு. இதெல்லாம் பெண்கள் விரும்ப மாட்டாங்கன்னு சொல்லவும் தயாரிப்பாளர் 2 நாள் சூட்டிங்கை நிறுத்திடுவாரு. என்னங்க எல்லாரும் இப்படி சொல்றாங்கன்னு கேட்பாரு.

38 கெட்ட வார்த்தை: நானும் மேக்சிமம் உங்ககிட்ட எல்லாமே நடிச்சே காமிச்சேன் சார். அதுல 38 கெட்ட வார்த்தை இருக்கு. அதெல்லாம் நான் உங்ககிட்ட சொன்னேனே சார்னு சொல்வேன். கரெக்ட். ஆனா எல்லாரும் ஒருமாதிரி இருக்குன்னு சொல்றாங்கன்னு சொல்வாரு. அப்புறம் அந்தக் குழப்பத்தைத் தீர்த்து வச்சி மறுபடியும் சூட்டிங் போகும். முடியைப் பிடிச்சி ஒரு பொம்பளையை அடிப்பேன். அதுக்கும் பிரச்சனை வந்தது. அப்புறம் அதையும் சமாளிச்சி படம் நடிச்சி முடிச்சாச்சு. ரிலீஸ்சும் ஆகிடுச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story