பாலுமகேந்திராவின் நிறைவேறாத ஆசைகள்... அதுல ஒன்னுக்கு மட்டும் வாய்ப்பிருக்கு..!

பாலுமகேந்திரா படங்களில் மூன்றாம்பிறை, வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ண பூக்கள் மிக முக்கியமானவை. கோகிலா என்ற கன்னடப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆரம்பத்தில் இவர் ஒளிப்பதிவாளராகவே இருந்துள்ளார். அதன்பிறகு இயக்கத்திற்கும் வந்துள்ளார் என்பதால் இவரது படங்கள் பெரும்பாலும் கலைப்படைப்பாகவே இருக்கும். மூன்றாம்பிறை படத்தில் இவர்தான் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். படம் சிறந்த கலைப்படைப்பாக இருக்கும்.
தமிழ்சினிமா உலகைப் புரட்டிப் போட்ட இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலுமகேந்திரா. இவரது படங்கள் எல்லாமே அருமையானவை. பார்க்க பார்க்க ரசிக்கத் தூண்டுபவை. இவருக்கு பல ஆசைகள் நிறைவேறாமலே போய்விட்டன. அது என்னன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
நிறைவேறாத ஆசைகள்: இயக்குனர் பாலுமகேந்திராவைப் பொருத்தவரைக்கும் ஒரு எஸ்டேட் வாங்கணும். ஒரு பென்ஸ் கார் வாங்கணும். 2 கோடி ரூபாயை பேங்க்ல போட்டு அதுல இருந்து வர்ற வட்டிப் பணத்துல ஜாலியா வாழ்க்கையை வாழணும்னு அவர் ஒருநாளும் நினைச்சதில்ல. அவருடைய ஆசை என்பதெல்லாம் இதை எல்லாம் தாண்டி வேறாக இருந்தது. அவரது நிறைவேறாத ஆசைகள் என்னென்னன்னு தெரிஞ்சா நீங்க ஆச்சரியப்படுவீர்கள்.
ரசித்துப் பார்க்கணும்: ஈரானியப் படங்களையும், ஜப்பானியப் படங்களையும் நாம வாயைத் திறந்துக்கிட்டு ரசிக்கிறோம்ல. அதே மாதிரி ஈரானியர்களும், ஜப்பானியர்களும் நம்ம தமிழ்ப்படத்தை ரசித்துப் பார்க்கணும் என்பது அவரது முக்கியமான ஆசையாக இருந்தது. பல முக்கியமான படங்களைப் பாதுகாக்கவும், அரிய படங்களின் இழப்பைத் தவிர்ப்பதற்கும் ஒரு ஆவண காப்பகத்தை உருவாக்க வேண்டும் என்பது அவரது 2வது ஆசையாக இருந்தது.
ஆசையை நிறைவேற்றலாம்: 3வது ஆசைதான் மிக முக்கியமான ஆசை. இன்றைக்குக் கூட தமிழக அரசு நினைத்தால் அந்த ஆசையை நிறைவேற்றலாம். தாதா சாகேப் பால்கே பெயரால் மத்திய அரசு விருது வழங்குவதைப் போல இங்கே தமிழ்நாட்டு சினிமாவின் பிதாமகனான நடராஜ முதலியாரின் பெயரிலே விருது வழங்க வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டார். பாலுமகேந்திராவின் இந்த 3 ஆசைகளும் அவரது மறையும் வரை நிறைவேறவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.