ரஜினி மாறினால் சினிமாவுக்கு நல்லது!. பல வருடங்களுக்கு முன்பே சொன்ன இயக்குனர்!...

Rajinikanth: ரஜினி என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் மாஸ் காட்சிகள், அவர் பேசிய பன்ச் வசனங்கள், ஸ்டைலான அவரின் நடை, அவரின் உடல் மொழி மற்றும் வசனம் பேசும் ஸ்டைல்தான். அதுதான் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று தந்தது. ரஜினிக்கு முன்பும் சரி, பின்பும் சரி அவரை போல ஸ்டைலாக நடிக்கும் நடிகர் இல்லை என்றே சொல்லலாம். சிம்பு போல சிலர் அவரை காப்பி அடித்து முயற்சி செய்தார்கள். ஆனால், கிளிக் ஆகவில்லை.
அதனால்தான் 72 வயதிலும் ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார். ரஜினியின் வயதுள்ள நடிகர்ளெல்லாம் அப்பாவாக நடிக்க துவங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், ரஜினி இப்போதும் ஹீரோவாக கலக்கி வருகிறார்.
ரஜினி என்றால் ஸ்டைல்தான் என்றாலும் அது மட்டுமே அவரின் அடையாளம் இல்லை. அபூர்வ ராகங்கள் நடிக்க துவங்கி அவர் மசாலா படங்களில் நடிக்க துவங்குவதற்கு முன்பி வரை பல நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்திருக்கிறார். மூன்று முடிச்சு, ஆடு புலி ஆட்டம், அவர்கள், புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் போல பல படங்களை சொல்ல முடியும்.
அதேபோல், மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த முள்ளும் மலரும் மற்றும் ஜானி ஆகிய இரண்டு படங்களுமே இப்போதுவரை ரசிகர்களால் சிலாகிக்கப்படும் படங்களாக இருக்கிறது. இந்த படங்களில் எல்லாம் ரஜினிக்குள் இருக்கும் திறமையான நடிகரை ரசிகர்கள் பார்க்க முடியும்.
ஒருகட்டத்தில் கமர்சியல் மசாலா படங்கள் என்கிற ரூட்டுக்கு போய் ரஜினியே இதுபோன்ற கதைகளில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஆக்சன் ஹீரோவாக மாறிவிட்டார். இப்போது வரை இது தொடர்கிறது. இந்நிலையில், ரஜினியை வைத்து ஜானி, முள்ளும் மலரும் போன்ற படங்களை இயக்கிய மறைந்த இயக்குனர் மகேந்திரன் பல வருடங்களுக்கு முன்பே ஒரு கருத்தை சொன்னார்.
ரஜினியை வைத்து நான் இயக்கிய படங்களில் அவருக்கு அமைந்த கதாபாத்திரங்கள் போல அதன்பின் அவருக்கு கிடைக்கவில்லை. ரஜினி முன் வந்து அதை செய்ய வேண்டும். அதற்கு அவரின் ரசிகர்களும் வழிவிட வேண்டும். அப்படி நடந்தால்தான் தமிழ் சினிமாவுக்கு நல்லது’ என சொல்லியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் வழக்கமான ஃபார்முலா பிடிக்காதவர்தான் மகேந்திரன். குறிப்பாக எந்த ஜீவனும் இல்லாத மசாலா படங்களை அவர் அறவே வெறுத்தார். அதனால்தான் தன்னுடைய படங்களில் மனித உறவுகளின் முக்கியத்துவத்தையும், அழகியலையும் தொடர்ந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.