அவர்கிட்ட சர்ட்டிபிகேட் வாங்க நான் சினிமாவுக்கு வரல!.. மணிரத்னம் கோபப்பட்ட மொமண்ட்!...

Manirathnam: இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக, பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் மணிரத்னம். அவர் இயக்கிய படங்களை பார்த்து சினிமாவுக்கு வந்தவர்கள் பலரும் இருக்கிறார்கள். அவரின் படத்தை பார்த்து ஒளிப்பதிவாளராக வேண்டும் என ஆசைப்பட்ட பல ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள்.
அலைபாயுதே படத்தில் ஒரு பிரிவுக்கு பின் மாதவனும், ஷாலினியும் சந்தித்துக்கொள்கிற காட்சிதான் தன்னை சினிமாவுக்கு போக வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியதாக இயக்குனர் கவுதம் மேனன் கூறியிருந்தார். இப்படி மணிரத்னம் படங்களை பார்த்துவிட்டு சினிமாவுக்கு வந்த பல இயக்குனர்கள் இருக்கிறார்கள்.
மணிரத்னம் இயக்கிய பாம்பாய், ரோஜா போன்ற படங்கள் தேசிய அளவில் கவனத்தை பெற்றது. அவர் இயக்கிய இதயத்தை திருடாதே, அலைபாயுதே, ஓகே கண்மணி, காற்று வெளியிடை உள்ளிட்ட காதல் படங்கள் மனதை மயிலிறகால் வருடியது. தீவிரவாதம், காதல், தேசிய பிரச்சனைகள், மதவாதம் ஆகியவற்றை தனது படங்களில் மணிரத்னம் அதிகம் பேசியிருக்கிறார்.
ரஜினியை வைத்து இவர் இயக்கிய தளபதி, கமலை வைத்து அவர் இயக்கிய நாயகன் ஆகிய 2 படங்களும் அந்த நடிகர்களின் ரசிகர்களுக்கு இப்போதும் ஃபேவரைட் படமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர், கமல் முயன்று எடுக்க முடியாமல் போன பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்து ஹிட் கொடுத்தார். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாச கதைகளை தழுவி படமெடுப்பார். இவர் இயக்கிய தளபதி படமே மகாபாரதத்தில் வரும் கர்ணன் - துரியோதனன் இடையேயான நட்புதான்.
இராமாயணத்தில் சீதையை இராவணன் கடத்தி செல்வதை தழுவி விக்ரமை வைத்து ராவணன் என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், பிருத்திவிராஜ், கார்த்திக் என பலரும் நடித்திருந்தனர். தமிழில் விக்ரம் நடித்த வேடத்தை ஹிந்தியில் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.
இந்தி வெர்ஷனை பார்த்த அமிதாப்பச்சன் ‘படத்தில் எடிட்டிங் சரியில்லை’ என கமெண்ட் அடித்தார். இதுபற்றி மணிரத்னத்திடம் ஒரு நிருபர் கேட்டதற்கு ‘அமிதாப்கிட்ட நல்ல மார்க் வாங்க நான் வரல. எனக்கு தெரிஞ்ச சினிமாவை நான் எடுத்திருக்கேன். என்ன சொன்னாலும் கவலை இல்லை. எனக்கு என்ன தெரியுமோ அதை பண்றேன்’ என பதிலடி கொடுத்தார் மணிரத்னம்.
இப்போது கமல், சிம்புவை வைத்து தக் லைப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். முதன்முறையாக கமலுடன் சிம்பு நடித்திருப்பதால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த திரைப்படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது.