தனுஷ் செய்த லீலை.. மொத்த சொத்தையும் இழந்த இயக்குனர்!.. அடப் பாவமே!..

by சிவா |
தனுஷ் செய்த லீலை.. மொத்த சொத்தையும் இழந்த இயக்குனர்!.. அடப் பாவமே!..
X

மைனா திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் பிரபு சாலமன். கண்ணோடு காண்பதெல்லாம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் விக்ரமை வைத்து கிங் என்கிற படத்தையும் இயக்கினார். அதன்பின், கொக்கி, லியோ, லாடம் ஆகிய படங்களை இயக்கினார்.

இந்த படங்களெல்லாம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதன்பின் அவர் இயக்கிய திரைப்படம்தான் மைனா. இந்த படத்தில் விதார்த்தும், அமலாபாலும் நடித்திருந்தார்கள். தேனி மலைப்பகுதியில் முழு படத்தையும் எடுத்திருந்தார். புதுமையான கதை என்பதால் இப்படம் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

எனவே, இப்படம் ஹிட் அடித்தது. அதன்பின் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவை வைத்து அவர் இயக்கிய கும்கி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. அதன்பின் தனுஷை வைத்து தொடரி, ராணாவை வைத்து காடன், கோவை சரளாவை வைத்து செம்பி ஆகிய படங்களை இயக்கினார். இவரின் படங்களை இவரே தயாரிப்பார்.

இவரின் படங்களுக்கு பெரும்பாலும் இமான் இசையமைப்பார். பாடல்களும் சூப்பர் ஹிட் அடிக்கும். தனுஷ் - கீர்த்தி சுரேஷை வைத்து அவர் இயக்கிய தொடரி திரைப்படம் பிரபு சாலமன் வாழ்க்கையை புரட்டி போட்டது பலருக்கும் தெரியாது. இந்த படத்தில் தனுஷ் சில விஷயங்களை எதிர்பார்க்க அதற்கு கீர்த்தி சுரேஷ் மறுக்க படப்பிடிப்புக்கு தனுஷ் சரியான ஒத்துழைப்பை கொடுக்கவில்லை என அப்போதே கிசுகிசு வெளியானது.

இதனால் பிரபு சாலமனால் நினைத்தது போல் படத்தை எடுக்க முடியவில்லை. எனவே, சொன்ன பட்ஜெட்டை விட செலவு அதிகமாகிப்போனது. பிரபு சாலமனை அழைத்த தயாரிப்பாளர் ‘இந்த படத்திற்கு இன்னும் செலவு செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், படம் நஷ்டமடைந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பு என ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும்’ என சொல்ல பிரபு சாலமனும் அதை செய்துவிட்டார்.

அப்படி வெளியான தொடரி படம் தோல்வி படமாக அமைந்தது. எனவே, அதுவரை தான் சினிமாவில் சம்பாதித்த சொத்துக்களை தயாரிப்பாளருக்கு பிரபு சாலமன் எழுதிக்கொடுத்தாராம்.

Next Story