எம்ஜிஆர் முதல்வரா இருந்தபோதே அப்படி ஒரு படம் எடுத்த இயக்குனர்... கலைஞர் வசனம் வேற!..

இயக்குனர் சி.ரங்கநாதன் முதல் படமே விஜயை வைத்து இயக்கினார். அதுதான் கோயமுத்தூர் மாப்ளே. இவர் நடிகராகவும் இருந்தார். ரஜினி, கமல், விஜய், விஷால், லாரன்ஸ், பார்த்திபன் என முக்கியமான கதாநாயகர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவர். தனது சினிமா உலக அனுபவங்கள் குறித்து பல விஷயங்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
10 படங்கள்: முதன்முதலாக எஸ்.ஏ.சந்திரசேகர் சாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். ராஜநடை படம். சேர்த்துவிட்டது இயக்குனர் ஆர்.சுந்தரராஜன். 10 படங்கள் அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கேன். அப்போ ஷங்கர், பவித்ரன் ஆகியோரும் இருந்தனர். நண்பர்கள் வரை ஒர்க் பண்ணினோம்.
ஆர்.சுந்தரராஜன் திருமதி பழனிச்சாமி படத்தை இயக்கினார். அவருடன் கோ-டைரக்டரா ஒர்க் பண்ணினேன். எஸ்.ஏ.சந்திரசேகர்கிட்ட தான் ஒழுங்குமுறையைக் கத்துக்கிட்டேன். அவர் மக்களுடைய பிரச்சனையை வெளிக்கொண்டு வரணும்.
எம்ஜிஆர் சிஎம்: சின்ன பிரச்சனை எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்கணும். யார் சிஎம்னு எல்லாம் பார்க்க மாட்டாரு. எம்ஜிஆர் சிஎம்மா இருக்கும்போதுதான் நீதிக்குத் தண்டனைன்னு படம் எடுத்தாரு. கலைஞர் வசனம் எழுதிய படம். இந்தப் படத்தில் தான் இயக்குனர் ஷங்கர் எஸ்ஏசியிடம் உதவியாளராக சேர்ந்தார்.

அடி நிச்சயம்: 2வது டேக் போனாலே அடி நிச்சயம். பிலிம் என்ன விலைக்கு விற்குதுன்னு ஆர்டிஸ்ட்கிட்ட கேட்பாரு. அவருக்கிட்டதான் பல நல்ல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். இப்பவும் தொடர்புல இருக்கேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நீதிக்குத் தண்டனை: 1987ல் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம் நீதிக்குத் தண்டனை. ராதிகா, நிழல்கள் ரவி, சரண்ராஜ், செந்தில், ஸ்ரீவித்யா, எஸ்.எஸ்.சந்திரன், செந்தாமரை உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் மக்களுடைய பிரச்சனைகளை தைரியமாக முன்வைத்தார் எஸ்ஏசி. எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் போய் பெரிதாகச் சேரவில்லை. என்றாலும் ரசிகர்களைப் போய் பெரிதாகச் சேரவில்லை. என்றாலும் படத்தில் சொல்ல வந்த கருத்துக்களைத் துணிச்சலாகச் சொன்னதற்காக எஸ்ஏசியைப் பாராட்டலாம். இது அவரது சொந்தப்படம்.