Categories: latest news

விஜயகாந்த் படத்தில் நான் செய்த தவறு!.. பல வருடங்கள் கழித்து சொன்ன இயக்குனர்!..

Vijayakanth: விஜயகாந்த் படங்கள் என்றாலே அவரின் படங்களில் இடம் பெறும் அதிரடி வசனங்களும், சண்டை காட்சிகளும்தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். விஜயகாந்தும் அதைத்தான் விரும்பினார். சினிமாவில் நடிக்க துவங்கியபோது அவரின் படங்களில் அதிக சண்டை காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

ஆக்சன் ஹீரோ: எம்.ஜி.ஆர் பாணியில் ஏழை மக்களுக்கு குரல் கொடுப்பது, அநியாயத்தை தட்டி கேட்பது, போலீசே தவறு செய்தாலும் அவர்களை அடித்து நொறுக்குவது என தனது படங்களில் காட்சிகளை வைத்தார் விஜயகாந்த். விஜயகாந்த் நடித்ததில் 80 சதவீத படங்கள் ஆக்‌ஷன் படங்கள்தான். விஜயகாந்த் ரசிகர்களும் அதைத்தான் விரும்புவார்கள்.

ஆனால், சுந்தர்ராஜன், விக்ரமன், ஆர்.வி.உதயகுமார் போன்ற சில இயக்குனர்கள் விஜயகாந்தை வேறு மாதிரியும் காட்டியிருக்கிறார்கள். அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்த நேரத்தில் விஜயகாந்தை வைதேகி காத்திருந்தாள் படத்தில் வேறு மாதிரி காட்டினார் சுந்தர் ராஜன். அதை தொடர்ந்து அவ்வப்போது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் விஜயகாந்த் நடிக்க துவங்கினார்.

வானத்தை போல: ஊமை விழிகள், செந்தூரப்பூவே, சின்னக் கவுண்டர், என் ஆசை மச்சான் போன்ற பல படங்களிலும் விஜயகாந்த் அப்படி நடித்திருக்கிறார். அந்த வரிசையில் விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம்தான் வானத்தை போல. இந்த படத்தில் தம்பிகளுக்காகவே வாழும் அண்ணன் வேடத்திலும், தம்பிகளில் ஒருவராகவும் இரட்டை வேடத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். மேலும், லிவிங்ஸ்டன், பிரபுதேவா, மீனா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

அண்ணன் தம்பி செண்டிமெண்ட்: 2000ம் வருடம் இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் அண்ணன் – தம்பி உறவுக்கான பல செண்டிமெண்ட் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த படத்தில் சண்டை காட்சிகளை வைப்பதில் விக்ரமனுக்கு உடன்பாடே இல்லை. ஆனால், விஜயகாந்த் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதால் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு சண்டைக்காட்சியை வைத்தார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய விக்ரமன் ‘வானத்தை போல படத்தில் நான் தப்பு பண்ணிட்டேன். ஏன்னா தம்பி விஜயகாந்துக்கு கொஞ்சம் ஹீரோயிசம் இருக்க மாதிரி காட்சிகளை நான் வச்சிருக்கணும். படத்தோட டப்பிங்கின் போதுதான் எனக்கு அது தோணுச்சி. ஆனா, ரீஷூட் பண்ண எனக்கு விருப்பமே இல்லை. அதனால் அப்படியே விட்டுட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

8 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

9 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

10 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

11 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

11 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

17 hours ago