ரஜினி, கமல் மாதிரி நடிக்காதீங்க… சூர்யாவுக்கு அட்வைஸ் கொடுத்தது அவரா?

Published on: March 18, 2025
---Advertisement---

இன்று தமிழ்சினிமாவில் காதல் ஜோடிகளுக்கு முன்னுதாரணமாக இருப்பது சூர்யா, ஜோதிகா தான். அவர்களது திருமண வாழ்க்கை இன்று வரை மகிழ்ச்சியாக உள்ளது என்றால் அவர்களுக்கு இடையே உள்ள புரிதல் தான் காரணம். ஜோதிகாவைப் பொருத்தவரை சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததே என்பதற்காக வரவில்லை.

தன்னுடைய குடும்பத்தைக் கஷ்டத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக வந்தவர். தமிழ்த்திரை உலகில் நிலையான இடத்தைப் பிடித்தார் என்றால் அதுக்கு முக்கியமான காரணம் ஜோதிகாவின் கடினமான உழைப்பைத்தான் சொல்ல வேண்டும்.

மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு: என்னுடைய திரைவாழ்க்கையிலும் ஜோதிகாவின் பங்கு முக்கியமானது. காக்க காக்க படத்தில் ஜோதிகாவின் சம்பளம் 30 லட்ச ரூபாய். என்னுடைய சம்பளம் 8 லட்சம். அப்படி என் சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு இருந்தபோதும் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியவர்தான் ஜோதிகா.

ஜோதிகா பரிந்துரை: காக்க காக்க படத்தில் நான் நடிச்சதுக்கு முக்கியமான காரணம் ஜோதிகா தான். கௌதம் வாசுதேவ் மேனன் அந்தப் படத்துக்காக கதாநாயகனைத் தேடிக்கிட்டு இருந்தபோது, நீங்க ஒருமுறை நீங்க நந்தா படத்தைப் பாருங்க. அதுல அவரது நடிப்பைப் பார்த்தா நிச்சயமா இந்தப் படத்துக்கு அவர்தான் பொருத்தமா இருப்பாருன்னு ஜோதிகா தான் பரிந்துரைத்தாராம்.

தனி பாணி: அவங்க சொன்ன இன்னொரு காரணத்தையும் நான் சொல்றேன். ரஜினி, கமல் இருவரையும் ஃபாலோ பண்ணாதீங்க. உங்களுக்குன்னு தனி பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கன்னு ஆரம்பகாலகட்டத்துலயே எனக்கு அறிவுரை சொன்னவங்கதான் ஜோதிகான்னு சூர்யா பத்திரிகை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

காக்க காக்க: 2003ல் கௌதம் மேனன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிக்க சூர்யா, ஜோதிகா நடித்த படம் காக்க காக்க. இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். அத்தனை பாடல்களும் செம ஹிட். மிடுக்கான போலீஸ் அதிகாரி தோற்றத்தில் சூர்யா அட்டகாசமாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment