பிஹைண்டுவுட்ஸ் நிறுவனம் கோல்டன் மைக் மியூசிக் விருதை இசை அமைப்பாளர் கங்கை அமரனுக்கு வழங்கியது. நிகழ்ச்சியில் மனோ, சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கங்கை அமரன் சின்னக்குயில் சித்ரா பற்றி சில வார்த்தைகளைப் பேசினார். வாங்க பார்க்கலாம்.
இளையராஜா: இந்த விருது வாங்குறது உங்களுக்கு எப்படி இருக்குன்னு ஆங்கர் கேட்டதற்கு கங்கை அமரன் இவ்வாறு பேசினார். எங்களுக்கு லைக் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி என்று இத்தனை பேரும் வருவதற்கு காரணம் இளையராஜா என்ற ஒரு பேரு தான்.
திரையுலகிற்கு ராஜா: இளையராஜா என்ற பெயரை பட்டம் சூட்டி இசை உலகிற்கு, திரையுலகிற்கு ராஜாவாக்கியது பஞ்சு அருணாச்சலம் அண்ணன். அவரது பிள்ளை சுப்புவிற்கு பஞ்சு அண்ணனே கொடுக்குற மாதிரி மனசுல சந்தோஷம். மனோ, சித்ரா இருவரும்தான் என் படத்துல அதிகமாக பாடி இருக்காங்க.
சின்னக்குயில் சித்ரா: சித்ரா ‘பூஜைக்கேத்த பூவிது’ பாடல்தான் முதல்ல பாடுனது. ‘சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா’ என்று சித்ரா பாடியதும்தான் அவருக்கு ‘சின்னக்குயில் சித்ரா’ என்ற பட்டம் கிடைத்தது.
இந்தப் பாட்டை அவ்ளோ நுணுக்கமா சொல்லிக் கொடுத்து பாட வச்சோம். என்ற கங்கை அமரனிடம் ஆங்கர் உங்களுக்குப் பிடிச்ச நடிகை யாருன்னு கேட்டாங்க. அதுக்கு வைஜெயந்திமாலான்னு சொன்னார் கங்கை அமரன்.
பூவே பூச்சூடவா: 1986ல் வெளியான படம் நீதானா அந்தக் குயில். ஆர்.செல்வராஜ் இயக்க, இளையராஜா இசை அமைத்துள்ளார். ராஜா, ராஜீவ், லட்சுமி, ரஞ்சனி, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில்தான் வைரமுத்து எழுதிய ‘பூஜைக்கேத்த பூவிது’ பாடலை சித்ரா பாடினார். அவருடன் பாடியது கங்கை அமரன். 1985ல் பாசில் இயக்கத்தில் வெளியான படம் பூவே பூச்சூடவா.
இளையராஜா இசை அமைத்துள்ளார். ஜெய்சங்கர், பத்மினி, நதியா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில்தான் ‘சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…