Categories: latest news

என்னது நடிகர் திலீப் இறப்புக்கு அதுதான் காரணமா? மனைவி, மகன் சொல்லும் பகீர் தகவல்

கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதுவாகவே வாழ்ந்த நடிகர்கள் ஒருசிலர் தான் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் நடிகர் திலீப். கமலின் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் 3 இளைஞர்களில் ஒருவராக அசத்தலாக நடித்து இருந்தார் திலீப். அவரது இறப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து அவரது மனைவி மற்றும் மகன் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்க.

பாலசந்தரின் அறிமுகம்: மைசூர்ல இறந்ததால அவர் இறந்துவிட்டார்னு பலருக்கும் தெரியாது. சென்னைக்கு வந்து ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டார். அப்பாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் சினிமாவுல எந்த பின்புலமும் இல்லை. சென்னை வந்ததும் ஆட்டோ ஓட்டிருக்காங்க. ஆரம்பத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாங்க. பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சாங்க. கே.பாலசந்தரின் படத்தில்தான் அறிமுகம் ஆகணும்கறதுதான் அப்பாவோட விருப்பம். அப்படியே ஆனாங்க.

நல்லா கவனிச்சாரு: பல மொழிகளில் திலீப் நடித்துள்ளார். குடும்பத்தையும் நல்லா கவனிச்சாரு. வீடு, குழந்தைங்கன்னா உயிரு அவருக்கு. எந்தவித குறையும் வைக்கமாட்டாரு. எனக்கும் அவரோட ஹேர் ஸ்டைல்னு பலரும் சொல்வாங்க. அவரோட மகன்னு சொன்னா பார்க்க அப்படியே இருக்கியே என்கிறார் திலீப்பின் மகன்.

பெண்மணி அவள் கண்மணி: எனக்கு 89ல கல்யாணம் ஆச்சு. அப்போ அவருக்கு பீக் டைம். சகலகலா சம்பந்தி, பெண்மணி அவள் கண்மணின்னு டாப்ல இருந்தாரு. 90, 91 வரைக்கும் நல்லாருந்தது. அதுக்கு அப்புறம்தான் வாய்ப்புகள் குறைய ஆரம்பிச்சது. ஹீரோவா டிரை பண்ணினாரு.

அப்புறம் அதுல வாய்ப்புகள் இல்லன்னதும் கேரக்டர் ரோல் பண்ணினாரு. அதுவும் குறைய ஆரம்பிச்சது. அவருக்கு கேரக்டர் ரோல் நல்ல கிளிக் ஆச்சு. பர்ஸ்ட் படம் சுஹாசினி மேடம் கூட ஹீரோவா பண்ணி இருந்தாரு.

பிசினஸ்: இன்னைக்கும் அவரது வாய்ஸ், நடிப்பு பலருக்கும் மனசுல இருக்கு. நான் 2ம் வகுப்பு படிக்கும்போதே அவருக்கு உடல்நிலை பாதிப்பு வந்துடுச்சு. படங்கள் வாய்ப்பு குறையும்போது சென்னையிலயே பிசினஸ் பண்ண ஆரம்பிச்சாரு. கன்னடத்துல பாக்கியராஜின் ஆராரோ ஆரிரரோ படத்தை ரீமேக் பண்ணி படம் பார்ட்னரா எடுத்தாரு. அதுவும் பிளாப். பிசினஸ்சும் பிளாப். அதனால ரொம்ப அப்செட்டா இருந்தாரு.

மஞ்சள்காமாலை: அப்போ கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்தது. புட் பாய்சன் மாதிரி இருந்ததுன்னு ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருந்தோம். 3-4 நாள் வெண்டிலேட்டர்ல இருந்தாரு. ரொம்ப முடியாம இருந்தாரு. அப்புறம் வெளிய வந்து நல்லா ஆனாரு. சில நாள்களில் மஞ்சள்காமாலை வந்தது. அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருந்தோம்.

சென்னையில நல்ல ஓய்வு அவருக்குக் கிடைக்கல. அப்புறம் மைசூருக்குப் போயிட்டோம். 8 வருஷம் அங்குதான் இருந்தோம். அங்கே தான் இவரது அண்ணன் இருக்காரு. ரியல் எஸ்டேட் பிரண்ட்ஸ்சும் இருந்தாரு. அப்புறம் உடல்நலத்துல ரொம்ப நல்லா இருந்தாரு. அவருக்கு சென்னைக்கே போயிடலாம்னு தான் ஆசை. 2011ல மதுரவாயலுக்கு வந்தோம். 2012ல செக் அப்புக்குப் போயிருந்தாரு.

ஹார்ட் அரெஸ்ட்: அந்த நேரத்துல எதிர்பார்க்காத நேரத்துல தான் ஹார்ட் அரெஸ்ட் ஆகிடுச்சு. எங்களுக்கு அந்த ஷாக்ல இருந்து வெளியே வர்றதுக்கு ரொம்ப நாளாச்சு. அப்புறம் அக்காதான் எல்லாம் பார்த்துக்கிட்டாங்க. அவங்க எனக்கு இன்னொரு அப்பா மாதிரி என்கிறார் திலீப்பின் மகன். நாங்க தான் சினிமாவுல இருந்து ஒதுங்கினோமே தவிர எங்களை யாரும் ஒதுக்கலை என்கிறார் திலீப்பின் மனைவி.

பொண்ணு அவரே மாதிரி: பங்சுவாலிட்டி, ப்ரீ பிளான் என பல விஷயங்களை அவருக்கிட்ட இருந்துக்கிட்டுத் தான் கத்துக்கிட்டோம். ரொம்ப கஷ்டப்படுறேன். என்னால முடியலங்கற வார்த்தை அவரு வாயில இருந்து வரல. பசங்க அவரு கொடுத்த கிப்ட். என் பொண்ணு அப்படியே அவரே மாதிரி இருப்பாள். இவ்வாறு திலீப்பின் மனைவி தெரிவித்துள்ளார்.

திலீப்பின் மனைவியின் பெயர் ஹேமா. இவருக்கு பவ்யா, மவுரியா என இரு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

3 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

4 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

5 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

11 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

12 hours ago