பராசக்தி படத்தில் கலைஞர் என்ட்ரி ஆனது எப்படி? இதுல இவ்ளோ விஷயம் நடந்துருக்கா?

by sankaran v |
பராசக்தி படத்தில் கலைஞர் என்ட்ரி ஆனது எப்படி? இதுல இவ்ளோ விஷயம் நடந்துருக்கா?
X

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் படம் பராசக்தி. இந்தப் படத்தைப் பற்றி பலரும் அறியாத தகவல் ஒன்றைப் பார்ப்போம். பாவலர் பாலசுந்தர் கூறிய நாடகம்தான் பராசக்தி. அதைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் முடிவு செய்தாராம்.

அப்போது வசனகர்த்தாவாக முதலில் ஒப்பந்தம் செய்தது திருவாரூர் தங்கராசு. இவர் அந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பத்திரிகை பேட்டி ஒன்றில் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். என்னென்ன சொல்றாருன்னு பாருங்க.

தினம் ஒரு ஆங்கிலப்படம்: பராசக்தி படத்தை இயக்கியவர்கள் கிருஷ்ணன் பஞ்சு. அவர்கள் தினமும் ஒரு காட்சியைப் பற்றி விவாதித்து அதற்குப் பின்னால் அதுல உள்ள வசனங்களை எல்லாம் முடிப்பர். நான் அந்தப் படத்தின் வசனத்தை எழுதிக் கொண்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து ஒரு ஆங்கிலப்படம் பார்த்து விட்டு வருவார்.

பல மாற்றங்கள்: அவர் முதல் நாள் பார்த்த படத்தின் பாதிப்பில் பல மாற்றங்கள் சொல்வார். நானும் அந்த மாற்றங்களைச் செய்வேன். இது தினமும் நடக்கும் சம்பவம். அதனால ஒரு காலகட்டத்தில் அந்தப் படத்தில் இருந்து நான் விலகிக்கொண்டேன்.

அதன்பிறகுதான் கலைஞர் கருணாநிதி அந்தப் படத்துக்கு வசனம் எழுதும் பொறுப்பை ஏற்றார். இவ்வாறு அவர் பத்திரிகை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

பராசக்தி: 1952ல் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் பராசக்தி. பி.ஏ.பெருமாள் முதலியார் தயாரித்துள்ளார். திரைக்கதை, வசனம் எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி. இந்தப் படத்தில் சிவாஜி, சகஸ்ரநாமம், எஸ்எஸ்ஆர், ஸ்ரீரஞ்சனி, பண்டரிபாய், விகே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஆர்.சுதர்சனம் இசை அமைத்துள்ளார். முதல் படத்துலேயே சிவாஜிக்கு முத்தாய்ப்பான நடிப்பு. கலைஞர் வசனத்தில் பட்டி தொட்டி எங்கும் படம் பட்டையைக் கிளப்பியது. படத்தில் வரும் கோர்ட் சீன் மிகப் பிரபலமானது. பாடல்களும் பிரபலம்தான்.

Next Story