வடிவேலுவோட காமெடி டிஸ்கஷன்ஸ் எப்படி நடக்கும்னு தெரியுமா? அட இது புது பாணியா இருக்கே..!

வடிவேலு மக்கள் கொண்டாடக்கூடிய தவிர்க்க முடியாத கலைஞன். குறிப்பா ஆரம்ப காலகட்டத்தில் அஜீத்துடன் வடிவேலு படங்கள்ல நடிச்சாரு. குறிப்பா தொடரும், பவித்ரா, ராசி, ராஜா. கடைசியா நடிச்ச ராஜா படத்துல ஏதோ பிரச்சனை. அதனால தான் தொடர்ந்து அஜீத்தோட நடிக்க முடியாமப் போச்சு என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தான்.
இது தவிர வடிவேலுவுக்கு வளர்ந்து வந்த கால கட்டத்துல அவரோட மென்டாலிட்டி எப்படி இருந்தது? அவரோட காமெடி டிஸ்கஷன்ஸ் எப்படி நடந்தது என்பது பற்றி பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
அஜீத்தோட வி.சி.குகநாதனின் படங்களான மைனர் மாப்பிள்ளை, பவித்ரா, ஆனந்த பூங்காற்றே, ராஜாவின் பார்வையிலே என நிறைய படங்கள்ல வடிவேலு நடிச்சாரு. பிற்காலத்தில் அவரை விட்டா வேற காமெடியன் கிடையாதுங்கற மென்டாலிட்டி வடிவேலுவுக்கு வந்துடுச்சு.
வடிவேலு மாதிரி பாடி லாங்குவேஜ் பின்னி எடுக்குற காமெடி நடிகர் இன்னொருத்தர் பிறந்துதான் வரணும். கவுண்டமணி, செந்தில் பீக்ல இருந்த காலகட்டத்துல வடிவேலு என்ட்ரி ஆகிறார். என் ராசாவின் மனசிலே படத்தில் தான் ராஜ்கிரண் அவரை அறிமுகப்படுத்தினாரு. பணம், புகழைப் பார்க்காத ஒரு கேரக்டர் தான் வடிவேலு.
vadivelu
அவரு சினிமாவுல சின்னக்கவுண்டர்னு நல்ல நல்ல படங்கள்ல நடிச்சி மார்க்கெட்ட பிடிச்சிட்டாரு. அஜீத், விஜய், விஜயகாந்த், சரத்குமார்னு எல்லாருடைய படத்துக்கும் வடிவேலு தேவைப்பட்டார். அதனால நாம இல்லன்னா இந்த சினிமா இல்லங்கற ரேஞ்சுக்குப் போயிட்டாரு. யாரையும் மதிக்கிறது இல்ல. வடிவேலு பீக்ல இருந்த காலகட்டத்துல காரில இருந்து இறங்கும்போது பாரின் விஸ்கியைக் கையில பிடிச்சிக்கிட்டே ஆபீஸ்சுக்குப் போவாரு.
அங்க பத்து பேரு ரெடியா இருப்பாங்க. அவங்களுக்கு லோக்கல் சரக்கு கொடுப்பாரு. அங்கே காமெடி டிஸ்கஷன் நடக்கும். கடைசியில ரெண்டு பெக் அடிச்சிட்டு மீதியை எடுத்துட்டு காரில ஏறிப் போயிடுவாரு. அப்படி நிறைய பேருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்துருக்காரு. விவேக் கிட்ட நடிச்சா இங்கே வரக்கூடாது. இங்கே நடிக்கிறவரு விவேக், கவுண்டமணிக்கிட்ட போகக்கூடாது. அப்படி சில கண்டிஷன்கள் எல்லாம் வச்சிருந்தாரு. அவரோட டிராவல் பிரமாதமா இருந்ததால அவரு கூடவே நிறைய பேரு இருந்தாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.