Categories: latest news

முதல் பாடலைப் பாடிய சித்ரா… ஜானகியைப் பார்த்துக் கத்துக்கோன்னு சொன்ன இளையராஜா

தமிழ்த்திரை உலகில் ‘சின்னக்குயில்’ என்று அழைக்கப்படும் பிரபல பின்னணிப் பாடகி சித்ரா. இவர் பாடிய பல பாடல்கள் சூப்பர்ஹிட். அதிலும் இவர் பாடிய முதல் பாடலின் போது என்ன நடந்ததுன்னு ரத்தினச் சுருக்கமாக சொல்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

இசைஞானி இளையராஜா இசையில் பிரபல பின்னணி பாடகி சித்ரா பாடிய முதல் பாடல் நீதானா அந்தக் குயில் என்ற படத்தில்தான் இடம்பெற்றது. அந்தப் படத்தை சித்ரா பாடியபோது இளையராஜா எந்தத் திருத்தத்தையும் சித்ராவிடம் சொல்லவில்லை.

அதற்குப் பதிலாக என்ன சொன்னாருன்னா ‘இந்தப் பாட்டுல எங்கெங்க நீ என்ன தப்பு பண்ணிருக்கன்னு நான் சொல்ல மாட்டேன். நீயே அந்தப் பாட்டை ஒரு முறைக்கு இருமுறை கேட்டு எந்த இடத்துல தப்பு பண்ணிருக்கங்கறதை என் கிட்ட சொல்லு’ன்னாரு.

அவரு அப்படி சொன்னதும் அந்தப் பாடலைத் திரும்ப திரும்ப கேட்ட சித்ரா எந்தெந்த இடத்தில் என்னவெல்லாம் தப்பு பண்ணிருக்கோம்னு கண்டுபிடிக்கிறாங்க. அதுமட்டுமல்லாமல் இளையராஜாவிடம் அதைச் சொல்லிவிட்டு ‘இந்தப் பாட்டை வேணா திரும்ப நான் பாடட்டுமா..’ என்று கேட்கிறார்.

s.janaki

அதற்கு இளையராஜா ‘வேண்டாம். இந்தப் பாடல் அப்படியே இருக்கட்டும். இதை எதுக்கு உனக்கு நான் சொன்னேன்னா அடுத்தடுத்த பாடல் பாடும்போது இது உன் மனதில் இருக்கும் என்பதற்காகத் தான் சொன்னேன்’. அதுமட்டும் இல்லாமல் ‘எஸ்.ஜானகியோட பாட்டைத் தொடர்ந்து கேளு. அந்த அம்மா பாடுவதற்கு முன்னால் அந்தப் பாட்டோட சூழ்நிலையை மட்டும்தான் நான் சொல்வேன்.

முதல் மரியாதை படத்தில் வரும் ராசாவே உன்னை நம்பி பாடல் பாடும்போது அந்த அம்மா கிட்ட நான் ஒண்ணே ஒண்ணு தான் சொன்னேன். ஒண்ணுமே தெரியாத பெண் பாடுகிற பாட்டு என்று. அதை மனதில் வைத்துக் கொண்டு எஸ்.ஜானகி பாடியதால் தான் அந்தப் பாட்டு இந்தளவுக்கு வந்தது’ என்று சித்ராவிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறார் இளையராஜா. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

sankaran v

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

6 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

7 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

8 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

21 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

21 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

1 day ago