மலேசியா வாசுதேவனிடம் இளையராஜா சொன்ன வார்த்தை... பிக்கப் ஆக அதுதான் காரணமாம்..!

80களில் இசை சாம்ராஜ்யம் நடத்தியவர் இசைஞானி இளையராஜா. அவர் இசை அமைத்தாலே படம் ஹிட் என்ற காலம் அது. இவரது முதல் படம் அன்னக்கிளி. அந்தப் படத்திலேயே எல்லாப் பாடல்களும் மாஸ்.
இவரது இசையில் எஸ்.பி.பி., ஜானகி, சித்ரா, மலேசியா வாசுதேவன் முக்கிய பாடகர்கள். இவர்களில் மலேசியாவாசுதேவன் எப்படி இளையராஜா மியூசிக்ல பாட ஆரம்பித்தார்னு பார்க்கலாம். இதுபற்றி அவரே சொல்லக் கேட்போம்.
பாட ஆர்வம்: 8வயசிலேயே எனக்கு தமிழ் சினிமாவுல பாட்டுப் பாடணும்னு ஆர்வம். அப்போ வி.குமார் இசையில் எனக்குப் பாட வாய்ப்பு வந்தது. நானும் பாடினேன். அப்புறம் 10 வருஷம் கேப். அதன்பிறகு எம்எஸ்வி.யின் இசையில் பாட ஒரு வாய்ப்பு வந்தது.
அதுதான் பாரதவிலாஸ். அதுல 4 பேரு பாடற ஒரு பாடல்ல நானும் சேர்ந்து பாடினேன். எம்எஸ்வி. பாராட்டினார். அப்புறம் நாலஞ்சு படங்கள்ல பாடுனேன். அப்புறம் 10 வருஷம் கேப். அப்போதுதான் பாவலர் பிரதர்ஸ் உடன் நட்பு கிடைச்சது.
16 வயதினிலே: அப்போ அவங்க கூட சேர்ந்து பாடினேன். 16 வயதினிலே படம் தான் எனக்கு திருப்பு முனை. அந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்தார். ஒருநாள் எஸ்பிபி பாட வேண்டிய பாடல். அவர் வர முடியவில்லை. அவருக்குத் தொண்டை கட்டியதால் பாட முடியாமல் கஷ்டப்பட்டார். அதனால் கம்போசிங் வரவில்லை. அப்போ நான் இருந்தேன். அப்படின்னா யாரு பாடுவான்னு கேட்டப்ப, இளையராஜா வாசு பாடுவான்.
டிராக்: அவனை வச்சி டிராக் எடுக்குறேன்னாரு. அப்போ இளையராஜா எங்கிட்ட சொன்ன வார்த்தை. 'இது டிராக்கை நினைச்சிப் பாடாத. உன்னை நினைச்சிப் பாடு. ஓகே ஆகிடும்'னாரு. அப்போ பாடுனதுதான் 'செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா. சேதி என்னக்கா. நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா முத்து பல்லக்கா அது என்னமோ என்னமோ ஹோய்...' என்ற சூப்பர்ஹிட் பாடல்.