5 நிமிடத்தில் பாடல் ரெடி... இளையராஜா செய்த அசத்தல் சாதனை.. எந்தப் படம்னு தெரியுமா?

by sankaran v |
5 நிமிடத்தில் பாடல் ரெடி... இளையராஜா செய்த அசத்தல் சாதனை.. எந்தப் படம்னு தெரியுமா?
X

இளையராஜா தமிழ்சினிமாவுக்குக் கிடைத்த பொக்கிஷம். அவரது பாடல்கள் நமக்கு சில நேரங்களில் நமக்கு உந்து சக்தியாகவும், பல மாமருந்தாகவும் உள்ளது. 80களில் இவர் போட்ட மெட்டுகள் எல்லாமே தேன் சொட்டுகள் தான். இப்படி ஒரு பெரிய இசைஞானி வாழும் கட்டத்தில் நாமும் வாழ்ந்து கொண்டு இருப்பது நமக்கே பெருமைதான்.

ரொம்பவே பிசி: இவரது இசை என்றாலே அந்தப் படம் சூப்பர்ஹிட் தான் என்று ஆகிய காலகட்டத்தில் இளையராஜா ரொம்பவே பிசியாக இருந்தார். அந்த வகையில் இவர் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் இசை அமைத்து அசத்தியுள்ளார். அந்த வகையில் கமல், ரஜனி, விஜயகாந்த், கார்த்திக், மோகன், ராமராஜன் என இவரது படங்களின் நாயகர்களைப் பற்றிப் பட்டியலிடலாம்.

5 நிமிடத்தில் உருவாக்கிய பாடல்: அந்த வகையில் இவர் பல சாதனைகளையும் இவரது படங்களில் செய்துள்ளார். அவற்றில் ஒன்றுதான் இது. 5 நிமிடத்தில் இவர் உருவாக்கிய பாடல். என்ன படம்னு பாருங்க.

சின்னக் கவுண்டர் படத்தில் வந்த முத்து மணி மாலை பாட்டுக்கு பதிலாக வேறு ஒரு பாடலை இசை அமைத்து இருந்தார் இளையராஜா. இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் எனக்கு இது வேணாம். கொஞ்சம் கிராமத்து ஸ்டைல்ல வேணும் என சொல்லி இருக்கிறார். கோபத்தில் இளையராஜா முத்துமணி மாலை என பாடிக்கொண்டே மெட்டு அமைத்திருக்கிறார். தொடர்ச்சியாக வரிகளை ஆர்.வி.உதயகுமார் எழுத ஐந்தே நிமிடத்தில் பாடல் தயாரானது.

சின்னக் கவுண்டர்: 1992ல் விஜயகாந்த் நடிக்க ஆர்.வி.உதயகுமார் இயக்கிய படம் சின்னக்கவுண்டர். விஜயகாந்தின் திரைப்பயணத்தில் இது ஒரு மைல் கல். படத்தில் சுகன்யா, கவுண்டமணி, செந்தில், மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜாவின் இசையில் தேனினும் இனிய பாடல்கள் உள்ளன. அந்த வானத்தைப் போல, சின்னக்கிளி வண்ணக்கிளி, சுத்தி சுத்தி, கண்ணுபட போகுதய்யா, கூண்டுக்குள்ள, முத்துமணி மால, சொல்லால் அடிச்ச என சூப்பர்ஹிட் பாடல்கள் அமைந்துள்ள படம் இதுதான்.

Next Story