Ilayaraja: இளையராஜா பல இசையமைப்பாளர்களுடனும் வேலை செய்திருக்கிறார். சுமார் ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர்களில் அதிகம் பாடல்களை பாடி சாதனை செய்தவரும் இவர்தான். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.
சிம்பொனி இசை: சினிமா மட்டுமில்லாமல் ஆல்பங்களை உருவாக்குவது, சிம்பொனி இசை அமைப்பது என பல எல்லைகளை தொட்டிருக்கிறார். சமீபத்தில் கூட சிம்பொனி இசையை அமைக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். ஒருபக்கம், இசை கச்சேரிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறார். சமீபத்தில் திருநெல்வேலியில் அவரின் இசைக்கச்சேரி நடந்தது.
அதோடு, ஊடகங்களில் தொடர்ந்து பேசியும் வருகிறார். அதில், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு முதல் சினிமாவில் அவர் சந்தித்த பிரச்சனைகள் மற்றும் விமர்சனங்கள் என எல்லாவற்றையும் பேசி வருகிறார். நான் ஆன்மிகத்திற்குள் போய்விட்டதால் விமர்சனங்களை என்னை பாதிப்பதில்லை என சொல்லியிருக்கிறார்.
விமர்சனங்களுக்கு பதில்: அதோடு, தனது இசையை கேட்டு மதம் பிடித்த யானை ஒன்று அமைதியாக நின்றதாக கூறியிருந்தார். தனது இசையை எல்லோரும் கேட்டுதான் ஆக வேண்டும். யாரும் தப்பிக்க முடியாது என்றும் ஜாலியாக பேசியிருந்தார். மேலும், ‘என்னை திமிறு பிடித்தவன் என சொல்கிறார்கள். யாரும் செய்யாததை நான் செய்திருக்கிறேன். எனக்குதான் திமிறு இருக்கணும். ஆனல், உண்மையில் எனக்கு திமிறு இல்லை. என்னை அப்படி சொல்பவனுக்குதான் திமிறு இருக்கிறது’ என பேசினார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் பாலுமகேந்திரா. சில இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைக்கும் போது மனதுக்கு இதமாக இருக்கும். அப்படி ஒரு உணர்வை அவரின் படங்கள் ஏற்படுத்தும். இதனால் மிகவும் ரசித்து ரசனையோடு இசையமைப்பேன். அவரின் ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையில் நான் 100 படங்களுக்கு இசையமைத்து முடித்திருப்பேன்.
அந்த படங்களுக்கு இசையமைப்பதை விட பாலுமகேந்திராவின் படங்களுக்கு இசையமைக்கும்போது இனம் புரியாத ஒரு சந்தோஷம் வந்து மனதில் ஒட்டிக்கொள்ளும். அவர் எப்பவுமே எனக்கு ஸ்பெஷல்’ என நெகிழ்ந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…