அம்பிகாவுக்கும், ராதாவுக்கும் எம்ஜிஆர் வாரிக் கொடுத்தது எல்லாம் உண்மையா? பிரபலம் சொல்லும் தகவல்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வாரி வாரிக் கொடுக்கும் வள்ளல் என்பது நமக்குத் தெரிந்த விஷயம். அதே நேரம் அவர் கஷ்டப்பட்டவங்களுக்குத் தான் அப்படிக் கொடுப்பார் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம்.
ஆனால் அக்கா தங்கை நடிகைகளான அம்பிகாவுக்கும், ராதாவுக்கும் கொடுத்து இருக்கிறார். அது உண்மையா என ரசிகர்கள் பலரும் நெட்டில் கேள்வி எழுப்பி வந்த வண்ணம் உள்ளனர். இதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இப்படி பதில் சொல்லி இருக்கிறார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
தமிழ்சினிமாவில் அரசியலில் தனக்கென தனி இடம் பிடித்து இன்று அவர் மறைந்தாலும்கூட மக்களின் மனதில் வாழ்ந்து வருபவர் எம்ஜிஆர். சினிமாவில் ஆட்சி செய்த அவர் அரசியலிலும் தொடர்ந்து 3 முறை மக்களின் முதல்வராக இருந்தார். நடிகராக இருந்தபோது அரசியலுக்கு வந்தபோதும் தனது வாழ்நாளில் பலருக்கும் உதவிகளை செய்துள்ளார். அதன்மூலம் மக்களின் மத்தியில் இன்றும் நிலைத்து நிற்கிறார்.
அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகைகளாக இருப்பவர்கள் அம்பிகா, ராதா. இவர்கள் சிவாஜி, ரஜினி, கமல், மோகன், பிரபு, விஜயகாந்த் என பலருடனும் இணைந்து வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்கள். ராதாவின் திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகினார்.
bharathiraja
ஆனாலும் அவரது அக்கா அம்பிகா தற்போது வரை சினிமாவில் நடித்து வருகிறார். சீரியலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது இருவரும் ஏஆர்எஸ். கார்டனை வாங்கினார்கள். அப்போது அந்த இடத்தை எம்ஜிஆர் இலவசமாகக் கொடுத்து இருந்தால் அப்போது எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் சும்மா விட்டு இருப்பார்களா?
அதுவும் இல்லாமல் அந்த ஏஆர்எஸ் கார்டன் அரசு நிலமும் கிடையாது. அது தனியார் நிலம். அவர்களிடம் இருந்து தான் ராதா அந்த இடத்தை வாங்கினார். அந்த இடத்துக்குப் பக்கத்து இடம் பாரதிராஜாவுடையது. இருவரும் இணைந்துதான் அந்த இடத்தை வாங்கினார்கள். மேலும் இந்த இடம் ஒண்ணே முக்கால் ஏக்கர்தான். ஆனால் இன்றைய மதிப்பு பல ஆயிரம் கோடி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Alaigal oyvathillai
அக்கா தங்கைகளாக சினிமாவில் வலம் வந்து வெற்றிக்கொடி நாட்டியவர்கள் அம்பிகாவும், ராதாவும். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அழகில் சளைத்தவர்கள் அல்ல. இவர்கள் 80களில் படத்தில் நடித்தாலே போதும். படம் வெற்றி தான். இவர்கள் இணைந்து நடிக்காத முன்னணி நடிகர்களே கிடையாது என்று சொல்லலாம்.
அந்தவகையில் பாரதிராஜா தான் ராதாவை அறிமுகப்படுத்தினார். அலைகள் ஓய்வதில்லை என்ற தனது முதல் படத்திலேயே ராதா முத்தாய்ப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.