பணம் இருந்தும் கடன் வாங்கும் கமல்.. இத ஒரு பழக்கமாவே வச்சிருக்காராம்.. ஏன்னு தெரியுமா?

by ராம் சுதன் |

தன் ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது ஒரு மெனக்கிடலை புகுத்தி அதை ஒரு தரமான படைப்பாக தருபவர் நடிகர் கமல்ஹாசன். இளம் தலைமுறைகளுக்கு மண்டையில் தட்டி புரியும் வகையில் சொல்லும் படைப்பாக கமலின் பல படங்கள் வெளி வந்திருக்கின்றன.சிவாஜிக்கு அடுத்த படியாக கமலைத்தான் நடிப்பிற்கு உதாரணமாக கூறி வருகிறோம். நடிப்பிற்கு இலக்கணமாக பல்கலைக்கழகமாக கமலை அனைவரும் பார்த்து வருகிறோம்.

புது புது முயற்சிகள், தமிழ் சினிமாவை உலகத்தரத்தில் உயர்த்த வேண்டும் என்ற அவரது எண்ணம் இன்னும் சினிமாவில் அவரால் நிலைத்து நிற்க உதவுகிறது. உலக நாயகன் என்ற பட்டத்தோடு பல ஆண்டுகளாக இந்த சினிமாவில் சர்வே செய்த கமல் சமீபத்தில்தான் அந்த பட்டம் வேண்டாம் என துறந்தார். ரசிகர்களிடம் இனி அப்படி என்னை கூப்பிட வேண்டாம் என வலியுறுத்தினார் கமல்.

சினிமாவில் அவருக்கு இருக்கும் ஞானம் யாருக்குமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு என்சைக்ளோபீடியாவாகவே வாழ்ந்து வருகிறார் கமல். ரசிகர்களிடம் கமல் பற்றிய பொதுவான பார்வை என்னவென்றால் கமல் கையிலிருந்து ஒரு பைசா கூட யாருக்கும் உதவ வராது என்பதுதான். ஆனால் தன் நண்பர்களுக்காக அவர்களின் வாழ்க்கை நல்ல முறையில் இருக்க வேண்டுமென்பதற்காக ஒரு பழக்கத்தை வைத்திருக்கிறாராம் கமல்.

தயாரிப்பாளர் கே.ஆர் கமலை பற்றி குறிப்பிடுகையில் தன்னிடம் பணம் இருந்தாலும் கடன் வாங்கிக் கொண்டுதான் இருப்பார் கமல் என்று கூறினார். ஏன் அவரிடம்தான் நிறைய பணம் இருக்கிறதே என்று கேட்பார்களாம். ஆனால் தன் நண்பர்களிடம் கடனாக வாங்கும் போது வட்டி என்ற அடிப்படையில் அவர்களுக்கு காசு போய்க் கொண்டே இருக்கும். அந்த வகையில் இன்னும் கொஞ்சம் நாள் தன்னுடைய நண்பர்களின் வாழ்க்கை செழிப்பாக இருக்கும் என கருதி கமல் அவர்களிடம் கடன் வாங்குவாராம்.

இதை ஒரு டிசிபிளினாகவே ஃபாலோ செய்து வருகிறாராம் கமல். ஆனால் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பணம் இருக்கப்போய்தானே அவர்களுடைய நண்பர்களும் கடன் கொடுக்கிறார்கள். அப்போ அவர்களும் நன்றாகத்தானே இருப்பார்கள். இதில் என்ன டிசிபிளின் இருக்கிறது? என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

Next Story