காசு முக்கியம் இல்ல!.. அமரன் டீமுக்கு கமல் போட்ட ஆர்டர்!.. காஷ்மீர் திக் திக்!.

Published on: August 8, 2025
---Advertisement---

எதையும் சரியாக திட்டமிட்டு செய்பவர்தான் கமல். சினிமாவில் நடிக்க துவங்கியது முதல் இப்போது வரை எல்லாமே அப்படித்தான். நடிகர்கள் நடிக்கும் வேலையை பார்த்துக்கொண்டிருந்த போது 1980ம் வருடத்திலேயே தயாரிப்பு நிறுவனம் துவங்கியவர் இவர். இந்த நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம் ராஜபார்வை. இது கமலின் 100வது திரைப்படம்.

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மற்ற நடிகராக இருந்திருந்தால் தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடியிருப்பார். ஆனால், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் கடந்த 45 வருடங்களாக சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்திருக்கும் தக் லைப் படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது.

கமல் நடிப்பில் உருவான பல படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், தேவர் மகன், விஸ்வரூபம், ஹே ராம், விக்ரம் என பெரிய பட்டியலே இருக்கிறது. வில்லன் நடிகராக இருந்த சத்தியராஜை ஹீரோவாக போட்டு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் எடுத்த படம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு. இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்புவை வைத்து ஒரு சரித்திர படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டு வேலைகள் வேகமாக நடந்தது. ஆனால், ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களுக்கு கொடுக்கும் விலையை குறைத்துக்கொண்டதால் இது டிராப் ஆனது. இப்போது இந்த படத்தை சிம்புவே தயாரிக்கவுள்ளார். அவரின் 50வது படமாக இப்படம் உருவாகவுள்ளது.

அதேபோல், சிவகார்த்திகேயனை வைத்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படம்தான் அமரன். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளுடன் போரிடும்போதும் இறந்து போன முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை சினிமாவாக உருவாக்கியிருந்தார்கள். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வந்தபோது ஒரு பிரச்சனை ஏற்பட்டு ஷூட்டிங் நடக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு போட்டுவிட்டார்கள். உடனே படப்பிடிப்பு குழுவை தொடர்பு கொண்ட கமல் உடனடியாக அங்கிருந்து கிளம்பி வந்துவிடுங்கள் என சொல்லியிருக்கிறார். அவர்களோ ‘எல்லோரும் வந்தால் விமான டிக்கெட் விலையே ஒரு கோடி ஆகிவிடும். நாங்கள் இங்கேயே தங்கி 144 தடை உத்தரவு முடிந்தபின் ஷூட்டிங்கை தொடர்கிறோம்’ என சொல்ல, கமலோ ‘காசு முக்கியம் இல்லை. எல்லோரின் பாதுகாப்புமே முக்கியம். உடனே அங்கிருந்து கிளம்புங்கள்’ என சொல்லிவிட்டாராம்.

சமீபத்தில் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடந்த பகல்ஹாம் பள்ளத்தாக்கின் அருகிலும் அமரன் படத்தின் ஷூட்டிங் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment