Categories: latest news

பாரதிராஜா இயக்கிய படத்தை பார்த்து பின்வாங்கிய கமல்.. இந்தப் படத்துக்கா?

உயிருக்கும் மேலான படம்: பாரதிராஜா இயக்கிய ஒரு படம் வெளியாக போகிறது என்று தெரிந்ததுமே கமல் தான் நடித்துக் கொண்டிருந்த ஒரு திரைப்படத்தை இப்போது ரிலீஸ் பண்ண வேண்டாம். வேண்டுமென்றால் நம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போடலாம் என சொல்லி இருக்கும் சம்பவம் தான் இப்போது வைரலாகி வருகின்றது. பாரதிராஜா தன் உயிருக்கும் மேலாக நினைத்து இயக்கிய திரைப்படம் தான் நிழல்கள்.

முற்றிலும் வித்தியாசமான கதைகளம். அந்த படத்தின் மீது பாரதிராஜா மிகப்பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருந்தார். இந்த படம் இயக்குவதற்கு முன்பு அவர் இயக்கத்தில் சுமார் ஏழு படங்கள் சில்வர் ஜூப்ளி பெற்ற படங்களாகவே இருந்தன. அதனால் நிழல்கள் படமும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது .நிழல்கள் படத்தின் ரிலீஸ் தேதியுடன்தான் பாலச்சந்தர் இயக்கிய வறுமையின் நிறம் சிவப்பு படமும் ரிலீஸ் ஆக இருந்தது.

சில்வர் ஜூப்ளி: இதை அறிந்ததும் கமல் பாலச்சந்தரிடம் பாரதிராஜாவின் படமும் அதே தேதியில் தான் ரிலீஸ் ஆகின்றன. நம் படத்தை வேண்டும் என்றால் கொஞ்சம் தள்ளிப் போடலாம் என சொல்லி இருந்தாராம். ஏனெனில் தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய படங்கள் சில்வர் ஜூப்ளி. ஆனால் நிழல்கள் படத்தை சித்ரா லட்சுமணன் பார்க்கும்பொழுது அப்பவே சித்ரா லட்சுமணன் இந்த படம் ஓடாது என சொல்லி இருக்கிறார்.

ஆனால் பாரதிராஜாவோ இளையராஜாவின் இசை இந்த படத்தைக் காப்பாற்றும். அதன் பிறகு பார் எனக் கூறினாராம்.ரீ ரிக்கார்டிங் எல்லாம் முடிந்த பிறகு மீண்டும் அந்த படத்தை இளையராஜாவின் இசையுடன் பார்த்த பொழுதும் லட்சுமணன் கதை எல்லாம் ஓகே. ஆனால் படம் கண்டிப்பாக ஓடாது என கூறியிருக்கிறார். அவர் சொன்னதை போல இந்த படம் சூப்பர் பிளாப் ஆனது.

ஏன் மணிவண்ணன்: இந்தப் படத்திற்கு கதை வசனம் எழுதியவர் மணிவண்ணன். இது மட்டுமல்ல படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். இந்த படத்திற்கு பிறகு மணிவண்ணன் கதாசிரியராக பணியாற்றிய படம் அலைகள் ஓய்வதில்லை. அதனால் ஒரு பிளாப்பான படத்திற்கு வசனம் எழுதியவரை மீண்டும் அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு எப்படி தேர்ந்தெடுப்பீர்கள் என அனைவரும் பாரதிராஜாவை கேட்டார்களாம்.

இருந்தாலும் மணிவண்ணன் மீது நம்பிக்கை வைத்து அலைகள் ஓய்வதில்லை படத்திற்கும் வசனம் எழுத சொல்லி இருக்கிறார் பாரதிராஜா. ஆனால் அந்தப் படம் எந்தளவு வெற்றி பெற்றது என அனைவருக்கும் தெரிந்த விஷயம் .இப்படித்தான் மணிவண்ணனின் கிராஃப்ட் அடுத்தடுத்து உயர்ந்து கொண்டே போனது என சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

ராம் சுதன்

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

6 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

7 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

14 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

15 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

16 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago