கடுமையாக கஷ்டப்படுத்திய சந்திரபாபு... போதும்டா சாமின்னு கம்பெனியை இழுத்து மூடிய கண்ணதாசன்

by sankaran v |
கடுமையாக கஷ்டப்படுத்திய சந்திரபாபு... போதும்டா சாமின்னு கம்பெனியை இழுத்து மூடிய கண்ணதாசன்
X

கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டதில் அவர் தயாரித்த கவலை இல்லாத மனிதன் படத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அதைப் பற்றி ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். என்னன்னு பார்க்கலாமா...

சந்திரபாபு: கவலை இல்லாத மனிதன் படத்துக்கு நானும் ஒழுங்காக கதை எழுதலை. அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு சந்திரபாபுவும் ஒழுங்காக வரல. என்னுடைய கம்பெனியில் வேலை பார்த்த எல்லாரும் எக்கச்சக்கமாகத் திருடினார்கள். என்னுடைய திரைவாழ்க்கையில் சந்திரபாபு கஷ்டப்படுத்தியதைப் போல வேறு எந்த நடிகரும் கஷ்டப்படுத்தியது இல்லை.

கடன்காரன்: அதே போல அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த காலங்களில் நான் அழுததைப் போல வேற எந்தக் காலத்திலும் நான் அழுதது இல்லை. என்னுடைய பங்காளி வெள்ளைப் பேப்பரில் எல்லாம் கையெழுத்துப் போட்டு என்னைக் கடன்காரன் ஆக்கினான்.

கடைசியில் 6 லட்ச ரூபாய் கடனோடு கம்பெனியை இழுத்து மூடினேன். அந்தப் படத்தால மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்துக்கு நான் ஆளானது மட்டுமல்ல. 39 வழக்குகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார் கண்ணதாசன். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

கவலை இல்லாத மனிதன்: படத்தின் பேரு தான் கவலை இல்லாத மனிதன். ஆனால் எல்லாம் தெரிந்த கவியரசர் கண்ணதாசனுக்கே இந்தப் படத்தால இப்படி ஒரு நிலைமையா என சிந்திக்க வைத்துள்ளது. ஏன்னா படத்தின் பெயரே கவலை இல்லாத மனிதன்தான். ஆனால் கவலை கவலை கவலையோ கவலை என்று பரிதவித்து விட்டாரே கண்ணதாசன்.

முரண்பாடு: சந்திரபாபுவைப் பொருத்தவரை படத்தில் அத்தனை பேரையும் நடிப்பாற்றலால் வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். ஆனால் அவர் நிஜத்தில் அதுவும் ஒரு கவிஞரையே அழ வைத்துவிட்டாரே... இதை எல்லாம் பார்க்கும்போது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது அல்லவா. சந்திரபாபு, கண்ணதாசனின் வாழ்க்கையில் இப்படி ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்குவார் என்று யாருக்கும் தெரியவில்லை.

எப்படி கோட்டை விட்டார்: அந்த வகையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியே வருவதற்குள் கண்ணதாசன் எவ்வளவு பாடுபட்டு இருப்பார் என்று நினைத்தால் கொஞ்சம் பரிதாபமாகத்தான் உள்ளது. அனைத்தும் தெரிந்த கவியரசர் இந்த விஷயத்தில் எப்படி ஒழுங்காகக் கதை எழுதாமல் கோட்டை விட்டார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

Next Story