கார்த்திக், குஷ்பூ இடையே கடும் மோதல்... பிரச்சனையைத் தீர்த்து வைத்த இயக்குனர்

by sankaran v |
கார்த்திக், குஷ்பூ இடையே கடும் மோதல்... பிரச்சனையைத் தீர்த்து வைத்த இயக்குனர்
X

தமிழ்சினிமா உலகின் நவரச நாயகன் யார் என்றால் அது கார்த்திக்தான். இவரது நடிப்பு தனித்துவமானது. எவ்வளவு பெரிய கதாபாத்திரமாக இருந்தாலும் இலகுவாக பேசி அசால்டாக நடித்துவிடுவார்.

வருஷம் 16: கார்த்திக், குஷ்பூ என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது வருஷம் 16 தான். அந்தப் படத்தில் தான் குஷ்பூ அறிமுகம். கார்த்திக்குடன் கெமிஸ்ட்ரி சூப்பரா ஒர்க் அவுட் ஆனது. தொடர்ந்து கிழக்கு வாசல் படத்திலும் நடித்தார்.

மனக்கசப்பு: ஆனால் ஏதோ சில காரணங்களால் இருவருக்கும் மனக்கசப்பு வந்து விட்டது. அதனால் இனி சேர்ந்து படங்கள் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தனர். கார்த்திக் படத்தில் குஷ்பூவை இயக்குனர் போட்டால் வேற ஹீரோயினைப் போடுங்கன்னு சொல்வாராம். அதே போல குஷ்பூவும் கார்த்திக் தான் ஹீரோன்னா அதுல நடிக்கவே மாட்டாராம்.

ஜோடிக்கு குஷ்பூ: இது இப்படி இருக்க விக்னேஷ்வர் என்ற படத்தை ஆர்.ரகு என்பவர் இயக்கினார். படத்தில் கார்த்திக்கை நடிக்க வைத்தார். ஜோடிக்கு குஷ்பூவிடம் பேசினார். கார்த்திக்னா நடிக்க மாட்டேன்னு சொல்லி விட்டார். 'உங்க சண்டையை தொழில்ல காட்டாதீங்க. அது நல்லது இல்ல'ன்னு சொல்லி அவரது மனதை மாற்றினாராம். அப்புறம்தான் குஷ்பூ நடிக்கவே ஒத்துக் கொண்டாராம். 91ல் வெளியான அந்தப் படம் சுமாராகப் போனது.

இது நம்ம பூமி: அதன்பிறகு இதே ஜோடியின் நடிப்பில் வெளியான இது நம்ம பூமி படம் சூப்பர்ஹிட் ஆனது. ஒருமுறை குஷ்பூ பேட்டி கொடுக்கையில், கார்த்திக்குடன் தனக்கு இருந்த நட்பு குறித்து இப்படி சொன்னார். அந்த இயக்குனர் மட்டும் எனக்கு அட்வைஸ் பண்ணலைன்னா கார்த்திக் என்ற ஒரு நல்ல நண்பரை நான் இழந்து இருப்பேன் என்றார். அதே போல கார்த்திக்கும் குஷ்பூவைப் பற்றிக் கேட்டால் 'கேட்காதீங்க. நான் எமோஷனல் ஆகிடுவேன்'னு சொல்வாராம்.

உள்ளத்தை அள்ளித்தா: அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு குஷ்பூவின் கணவர் சுந்தர்.சியின் இயக்கத்தில் கார்த்திக் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்தார். இது முழுநீள காமெடி படம். கவுண்டமணியின் நடிப்பு செம மாஸாக இருக்கும். பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

Next Story