மௌனராகம் படத்தில் கார்த்திக் எப்படி வந்தார்? போற போக்கில் வந்த வாய்ப்புதானா இது?

முதல் பட அறிமுகம்: அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்திக். முதல் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதன் பிறகு அவருக்கு அடுத்தடுத்து படங்கள் வாய்ப்பு வரும் என எதிர்பார்த்த நிலையில் சொல்லிக் கொள்ளும்படியாக வாய்ப்புகள் வரவில்லை. அப்படியே வந்தாலும் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இடை இடையே கிடைக்கிற கதாபாத்திரங்களில் நடித்து வந்த கார்த்திக்குக்கு அடிச்சான் பாருயா மணியார்டர் என்ற வடிவேல் சொல்வதைப் போல மௌன ராகம் திரைப்படத்தின் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
மௌனராகம் உருவான கதை: அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை பற்றிய செய்தி தான் இப்போது வைரலாகி வருகின்றது. கார்த்திக்கின் அண்ணனும் மணிரத்தினமும் நண்பர்களாம். இருவரும் ஒரு சமயம் பேசிக்கொண்டிருந்த பொழுது மணிரத்தினம் கார்த்திக்கின் அண்ணனிடம் இந்த மாதிரி மௌன ராகம் என்ற ஒரு படத்தை இயக்கப் போகிறேன். அந்தப் படத்தில் ஒரு கேரக்டர் இருக்கிறது. அதில் கேரக்டர் ஆர்டிஸ்ட் நடித்தால் நன்றாக இருக்காது.
கார்த்திக்கின் அண்ணன்: ஒரு ஹீரோ நடித்தால்தான் நன்றாக இருக்கும். இரண்டு மூன்று ஹீரோக்களிடம் கேட்டும் இது கெஸ்ட் ரோல் என சொல்லி மறுத்து விட்டார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை என கூறினாராம். உடனே கார்த்திக்கின் அண்ணன் நம்ம முரளி இருக்கிறானே. அவனுக்கும் இப்போது படம் இல்லை. அவனை வேண்டுமென்றால் நடிக்க வைக்கலாமே எனக் கார்த்திக்கை பற்றி கூறினாராம். ஏனெனில் கார்த்திக்கின் இயற்பெயர் முரளி.
அதன் பிறகு தான் மணிரத்தினம் இந்த படத்தில் கார்த்திக்கை நடிக்க வைத்திருக்கிறார். இந்த படத்தில் கெஸ்ட் ரோல் என்றாலும் படம் முழுக்க கார்த்திக்கின் பிம்பம் தான் அங்கும் இங்கும் தெரியும். அப்படி ஒரு கேரக்டர் அது. ஒரு பக்கம் ரேவதி ஒரு பக்கம் மோகன் என இருந்தாலும் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் பொழுது கார்த்திக்கின் கேரக்டர் மட்டும்தான் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும்.
அந்த அளவுக்கு ஒரு வெயிட்டான கதாபாத்திரம். அதுவும் ஊமை விழிகள் வரை வேறொரு தோற்றத்திலும் இந்தப் படத்தில் இன்னும் அழகாகவும் சார்மிங்காகவும் இருப்பார் கார்த்திக். நடிகைகளுக்கு மிகவும் பிடித்தமான நடிகர் யார் என்றால் அது கார்த்திக் தான். அந்த அளவுக்கு மௌன ராகம் திரைப்படத்தில் அவருடைய அழகில் ஒரு பொலிவு இருக்கும். துருதுருவென கேரக்டர். இப்பொழுது பார்த்தாலும் அந்த படம் பிரஷ்ஷாக இருக்கும். இந்த படத்திற்கு பிறகு தான் அக்னி நட்சத்திரம் திரைப்படத்திலும் நடித்து அடுத்த ஒரு 15 வருடத்திற்கு கார்த்திக்கின் ராஜ்ஜியம் தான் தமிழ் சினிமாவில் நடந்தது.