ஏற்கனவே 5 பேரு லிஸ்ட்ல இருக்காங்க!.. இப்ப இவர் பேரும் அடிபடுதே!. ஏ.கே.64 அப்டேட்!...

Ajithkumamar: கோலிவுட்டில் ஸ்டைலீஷ் ஹீரோவாக வலம் வருபவர் அஜித்குமார். விஜயை போலவே இவருக்கும் பெரிய ரசிகர் கூட்டம் ஒன்று. இதனால் பல வருடங்களாகவே விஜய் - அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் மோதிக்கொள்கிறார்கள். திரையில் போட்டி நடிகர்களாக இருந்தாலும் இருவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது
விஜய் அரசியல் கட்சி துவங்கியது அஜித் அவருக்கு வாழ்த்து சொன்னார். அதேபோல், அஜித் கார் ரேஸில் வெற்றி பெற்றபோது விஜய் அவருக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார். அஜித்தின் விடாமுயற்சி படம் கடந்த 6ம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் என்கிற படத்தின் ரீமேக் என்றாலும் கதையில் பல மாற்றங்களை செய்திருக்கிறார்கள். கதாநாயகியை ஒரு குரூப் கடத்துகிறது என்பதை தவிர மற்ற எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்கள்.
அஜர்பைசான் நாட்டில் நடைபெறும் கதை என்பதால் மேக்கிங் ஹாலிவுட் படம் போல இருக்கிறது என பலரும் சொன்னார்கள். ஆனாலும், படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெற்றதான் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் எனத்தெரிகிறது.
ஒருபக்கம், அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. கங்குவா படம் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பெற்ற போது சிறுத்தை சிவாவிடம் அஜித் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அதேபோல், விஷ்ணு வர்தன் மற்றும் வெங்கட்பிரபு ஆகியோரும் அஜித்தின் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். அதன்பின் மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சுவாமி நாதன் மற்றும் போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா ஆகியோரும் பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் கசிந்தது.
இந்த 5 பேரில் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்பது தெரியாத நிலையில் இப்போது கார்த்திக் சுப்பாராஜின் பெயரும் அடிபடுகிறது. இவர் ஏற்கனவே விஜயை வைத்து படமெடுக்க ஆசைப்பட்டு அவரிடம் கதையெல்லாம் சொன்னார். ஆனால், அவர் சொன்ன கதை பிடிக்காமல் ஹெச்.வினோத்தை தேர்ந்தெடுத்தார் விஜய்.
இப்போது அஜித்துடன் கார்த்திக் சுப்பாராஜ் பெயர் அடிபடுகிறது. அஜித்தை வைத்து ஜெயிலர் படம் போல ஒரு டார்க் ஹியூமர் படம் எடுக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது என ஒருமுறை கார்த்திக் சுப்பாராஜ் சொல்லியிருந்தார். மேலும், விஜய், அஜித்தை வைத்து படங்களை இயக்கினால்தான் முன்னணி இயக்குனர் என சொல்லக்கூடாது. நல்ல படங்களை இயக்கும் இயக்குனர்கள் எல்லாமே சிறந்த இயக்குனர்கள்தான் என ஒருமுறை சொல்லியிருந்தார். எப்படியும் குட் பேட் அக்லி படம் வெளியான பின் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.