இளையராஜாவ பார்க்க படம் தயாரிச்சேன்.. அதுவும் கடன் வாங்கி.. இப்படியும் ஒரு தயாரிப்பாளரா?
இளையராஜாவின் இசை இன்று உலகெங்கும் பரவிக் கிடைக்கின்றது. இவருடைய இன்னிசை மழையில் நனையாதவர்களே இல்லை என்று கூறலாம். இளையராஜா ஆரம்பத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் எப்படி சென்னைக்கு வந்தார் என்பது பற்றி பல தகவல்கள் பல பேருக்கு தெரிந்திருக்கும். ஆரம்ப காலங்களில் இவர் பெண் குரலில் மட்டுமே பாடி வந்தார். இவருடைய அண்ணன் பாவலர் பாதையில் பயணித்து இன்று ஒரு பெரிய ஆளுமையாக திகழ்ந்து வருகிறார் இளையராஜா.
இவருடைய அபரிமிதமான திறமையாலும் இசை நுணுக்கத்தாலும் இன்று இவரை இசை ஞானி என அழைத்து வருகிறோம். இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இளையராஜா திகழ்ந்து வருகிறார். இசையில் மிகவும் வல்லமை பெற்றவர். அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் இளையராஜா.
இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவருடைய ஒட்டுமொத்த குடும்பமே இசைக் குடும்பமாகத்தான் இருக்கிறார்கள். மேற்கத்திய பாரம்பரிய இசை நாட்டுப்புறப் பாடல் தாலாட்டு பாடல் என ஒரு பெரிய திறமைசாலியாக இசையில் திகழ்ந்து வருகிறார். இந்திய அரசின் பத்மபூஷன் விருது, பிலிம்பேர் விருது ,கேரளா அரசின் விருது, நந்தி விருது,கலைமாமணி விருது, தமிழ்நாடு மாநில திரை விருது என பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரராகவும் திகழ்ந்து வருகிறார்.
இவரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் பஞ்சு அருணாச்சலம். அதிலிருந்து இன்று வரை புகழின் உச்சியிலேயே இருந்து வருகிறார் இளையராஜா. தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என அனைத்து மொழிகளிலும் ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார். இவரை பார்ப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.
ரஜினி கமல் படங்களுக்கே இசையமைக்க இளையராஜாவை ஒப்பந்தம் செய்வது அப்போதைய காலகட்டத்தில் மிகவும் சவாலாக இருந்தது. அந்த அளவுக்கு எல்லா படங்களிலும் இளையராஜா இசையமைத்து வந்தார். இந்த நிலையில் இயக்குனர் கஸ்தூரிராஜா இளையராஜாவை பற்றி கூறும்பொழுது அவரை பார்ப்பதற்காகவே நான் ஒரு படத்தை தயாரித்தேன் எனக் கூறி இருக்கிறார்.
இயக்குனராக இருந்த கஸ்தூரிராஜா மௌன மொழி என்ற படத்தின் மூலம்தான் பாடல் ஆசிரியராக அறிமுகமாகி இருக்கிறார். அந்த படத்தை இயக்கியதும் கஸ்தூரிராஜா தான். தேவா இசையில் அந்த படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கஸ்தூரிராஜா. அதுவரை தேவாவுடன் 5 படங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறாராம். அதனால் ஒரு பாடலாசிரியராக மாறிவிட்டோம். இளையராஜாவுடன் எப்படியாவது சேர்ந்து பாடலை எழுத வேண்டும் என விருப்பப்பட்டிருக்கிறார்.
ஆனால் அது நடக்கவே இல்லையாம். இளையராஜா எப்போது கூப்பிடுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த கஸ்தூரிராஜா எப்படியாவது இளையராஜா உடன் சேர்ந்து பாடலை எழுத வேண்டும் என்ற முயற்சியில் சொந்தமாகவே ஒரு படத்தை தயாரித்திருக்கிறார். அதுவும் கடன் வாங்கி அந்த படத்தை எடுத்தேன் .அப்படித்தான் அந்த படத்தில் இளையராஜா இசையில் நான் பாடல் வரிகளை எழுதினேன் என ஒரு பேட்டியில் கஸ்தூரிராஜா கூறியிருக்கிறார்.