நடிகரா மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கெத்து காட்டிய மணிகண்டன்.. என்னென்ன படங்கள் தெரியுமா?

நடிகர் மணிகண்டன்: தற்போது வளரும் இள நடிகர்களில் அனைவரையும் கவர்ந்த நடிகராக இருப்பவர் மணிகண்டன். இவருடைய தொடர் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்திருந்தாலும் ஜெய் பீம் திரைப்படம் தான் இவருக்கு பெரிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. நடிகராக மட்டுமல்லாமல் அடிப்படையில் இவர் ஒரு டயலாக் ரைட்டர் ஆகவும் இயக்குனராகவும் இருந்திருக்கிறார்.
நடித்த படங்கள்: தமிழ் சினிமாவில் இப்போது மணிகண்டன் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார் மணிகண்டன். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து இன்று நேற்று நாளை, எட்டு தோட்டாக்கள் ,காலா ,சில்லுக்கருப்பட்டி, நெற்றிக்கண் ,விக்ரம் வேதா போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார் மணிகண்டன்.
டையலாக் ரைட்டர்: இதனை தொடர்ந்து லீடு ரோலில் நடித்த திரைப்படம் தான் ஜெய்பீம். இந்தப் படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பு அனைவரையும் திகைக்க வைத்தது. இப்படி நடிகராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் டயலாக் ரைட்டர் ஆகவும் இருந்திருக்கிறார் மணிகண்டன். பீட்சா 2 ,வில்லா ,விசுவாசம், தம்பி, சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் இதில் வரக்கூடிய ஒரு சில பகுதிகளில் டயலாக் ரைட்டராக இருந்திருக்கிறார் மணிகண்டன்.
இயக்கிய முதல் படம்: இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்திற்கும் இவர்தான் டயலாக் ரைட்டர். இந்த படத்திற்காக பெஸ்ட் டயலாக் ரைட்டர் என்ற விருதையும் மணிகண்டன் பெற்றார் மணிகண்டன். இவருடைய முதல் படத்தை 2015 ஆம் ஆண்டிலேயே இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் டெல்லி கணேஷ் இவர்கள் இருவரும் நடித்திருந்தனர். தனிமையில் இருக்கிற ஒரு வயதானவர், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வேலை தேடி அலையும் இளைஞர் இவர்கள் இருவரை பற்றிய கதைதான் நரை எழுதும் சுயசரிதை என்ற திரைப்படம்.
இந்த படம் 2022 ஆம் ஆண்டில் தான் ரிலீஸ் ஆனது. ஆனால் அதற்கு முன்னாடியே 2016லேயே பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் இவருடைய இந்த படம் திரையிடப்படுவதற்கான அதிகார பூர்வமாக தேர்வு செய்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து 2016ல் நியூயார்க் இந்தியன் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தது.
ஹீரோவாக ஜொலிக்கும் மணிகண்டன்: இந்த படம் இரண்டு லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என சொல்லப்படுகிறது. இப்படி நடிகராக இயக்குனராக டயலாக் ரைட்டர் இருந்த மணிகண்டன் ஹீரோவாக நடித்த திரைப்படம் குட் நைட். இந்தப் படத்தை தொடர்ந்து லவ்வர் என்ற படத்தில் நடித்திருப்பார். இந்த படங்களுக்குப் பிறகு ஒரு ஹீரோவாக பிரபலமாகிவிட்டார் மணிகண்டன் .சமீபத்தில் இவருடைய நடிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.