ஏய் பொறம்போக்கு.. 1000 பேர் முன்னாடி நடிகையை அசிங்கப்படுத்திய மன்சூர் அலிகான்

தமிழ் சினிமாவில் 90களில் பல படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் நடிகர் மன்சூர் அலிகான். விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் மன்சூர் அலிகான். முகம் நிறைய ரத்தம், வீரப்பன் போன்ற தோற்றம் என முதல் படத்திலேயே மிரட்டினார். தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார்.
தற்போது அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். அதுபோக குணச்சித்திர வேடத்திலும் அவ்வப்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் பல படங்களில் துணை நடிகையாக நடித்து வருபவர் நடிகை சிவாஜி மல்லிகா. இவர் பல படங்களில் பிச்சைக்காரி கதாபாத்திரம், வேலைக்கார் கதாபாத்திரம் போன்ற கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்றவர். ஒரு படத்தின் படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து சிவாஜி மல்லிகா கூறியிருக்கிறார்.
மன்சூர் அலிகான் தான் அந்தப் படத்திற்கு வில்லனாம். சிவாஜி மல்லிகாவுடன் நான்கு பெண்கள் அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றிருக்கிறார்கள்.ஒரு உதவியாளர் டையலாக் பேப்பரை கொண்டு வந்து உங்களில் ஒருவர் இந்த வசனத்தை பேசவேண்டும் என சொல்லியிருக்கிறார். உடனே அருகில் இருந்த பெண் சிவாஜி மல்லிகாவை கைக்காட்டி நீ பேசு என சொல்லியிருக்கிறார்.
இவருக்கு பெரிய அளவில் டையலாக் பேச தெரியாதாம். இருந்தாலும் சிவாஜியின் ரசிகையாக இருந்து கொண்டு டையலாக் பேசத்தெரியவில்லை என்றால் எப்படி என பேப்பரை வாங்கி படித்து பார்த்தாராம். அது மன்சூர் அலிகானுடன் சம்பந்தப்பட்ட காட்சி. ஷாட் ரெடியானதும் சிவாஜி மல்லிகாவுக்கு நடுக்கமாக வந்து விட்டதாம். உடனே மன்சூர் அலிகான் ஏய் பொறம்போக்கு என கூப்பிட்டாராம். தன்னைத்தான் திட்டுகிறார் போல என நினைத்துக் கொண்ட சிவாஜி மல்லிகா அவர் உதவியாளரை அப்படி திட்டி கூப்பிட்டிருக்கிறார் என்பதை அப்புறம் தெரிந்து கொண்டாராம்.
உடனே அந்த உதவியாளரிடம் ஸ்ப்ரே இருந்தா கொண்டு வந்து இவ மூஞ்சில அடிச்சு விடு என சிவாஜி மல்லிகாவை பார்த்து சொல்லியிருக்கிறார். சிவாஜி மல்லிகாவுக்கு என்ன பண்றதுனே தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாராம். உடனே இயக்குனர் வந்தும் சிவாஜி மல்லிகாவை பார்த்து திட்டியிருக்கிறார். நீயெல்லாம் எதுக்கு வர்ற என்று அத்தனை பேர் முன்னாடி கேட்டாராம்.
இது ரொம்ப அவமானமா போச்சு. இருந்தாலும் அசிங்கப்பட்டது பட்டதுதானே? இருந்தாலும் சிவாஜி ரசிகையாக இருக்கிறோம். அதனால் இனிமேல் நன்றாக நடிக்க வேண்டும் என முழு ஈடுபாட்டுடன் நடிக்க தொடங்கினாராம் சிவாஜி மல்லிகா.