Categories: latest news

குக்கூ படத்தால் 4 வருஷமா கெத்து தினேஷ் பட்ட பாடு!.. ஷாக் கொடுத்த மாரி செல்வராஜ்!…

Actor Dinesh: பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் தினேஷ். இந்த படத்திற்கு பின் அவரை எல்லோரும் அட்டக்கத்தி தினேஷ் என அழைத்தார்கள். விஜய் டிவியில் காதலிக்க நேரமில்லை சீரியலில் நடித்துதான் தனது நடிப்பு கேரியரை துவங்கினார்.

நடிகை சீதா நடித்த பெண் எனும் சீரியலில் அவரின் மகனாகவும் இவர் நடித்திருக்கிறார். ஆடுகளம், மௌன குரு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அதன்பின்னர்தான் அட்டக்கத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் குக்கூ, திருடன் போலீஸ், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், விசாரணை, ஒரு நாள் கூத்து, கபாலி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விசாரணை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ‘பல காட்சிகளில் போலீசாரிடம் அடி வாங்குவது போல நடித்தார். வேறு நடிகராக இருந்தால் படத்தை விட்டே ஓடியிருப்பார். தினேஷ் சின்சியராக நடித்தார்’ என வெற்றிமாறனே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

போன வருடம் வெளியான லப்பர் பந்து திரைப்படம் இவருக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தில் கெத்து என்கிற வேடத்தில் நடித்து இப்போது கெத்து தினேஷாக மாறிவிட்டார். இந்த படத்தில் விஜயகாந்த் ரசிகராக வந்து கலக்கி இருந்தார். இந்த படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் ‘இப்படி ஒரு நடிப்பை நான் யாரிடமும் பார்த்தது இல்லை. அவர் எப்படி இப்படி நடித்தார் என்றே தெரியவில்லை. அவருடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன் என சொல்லி இருக்கிறார்.

ராஜுமுருகன் இயக்கத்தில் குக்கூ படத்தில் கண்பார்வையற்றவராக நடித்திருந்தார் தினேஷ். இந்த படத்திற்காக தனது கண்களை கண்பார்வையற்றவர்களின் கண்கள் எப்படி இருக்குமோ அப்படியே வைத்திருந்தார் தினேஷ். இந்நிலையில், மாரி செல்வராஜ் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘நான் ராம் சாரிடம் உதவி இயக்குனராக வேலை செய்து கொண்டிருந்தபோது குக்கூ படத்தின் ஆடியோ லான்ச் இன்விட்டேஷனை எடுத்து வந்தார் தினேஷ். எனக்கு ஒரே ஆச்சர்யம். அவரோ கண்ணு மாறவே இல்ல. அந்த படத்தில் நடிச்ச மாதிரியே இருந்தது. கிட்டத்தட்ட 4 வருஷமா அந்த கண்ணு அப்படியேதான் இருந்ததாம்’ என சொல்லி இருக்கிறார்.

பாலாவின் இயக்கத்தில் விஷால் அவன் இவன் படத்தில் கண்ணை வித்தியாசமாக வைத்து நடித்தார். அதனால் ஒற்றை தலைவலி ஏற்பட்டு நிறைய கஷ்டப்பட்டார் என நடிகர் ஆர்யா ஒரு மேடையில் பேசியிருந்தார். அதுபோலவே தினேஷும் பல வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

4 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

6 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

7 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

9 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

12 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

1 day ago