ஜெய்சங்கருக்குக் கிடைக்க வேண்டிய 2 அருமையான வாய்ப்பு… ஆனால் தட்டிப் பறித்ததோ எம்ஜிஆர், ஜெமினி!

Published on: August 8, 2025
---Advertisement---

ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் 2 மிக முக்கியமான படங்களைத் தவறவிட்டவர் ஜெய்சங்கர். இவ்வளவுக்கும் ஏவிஎம்மின் பிள்ளைகளான சரவணன், குமரன், பாலசுப்பிரமணியம் அனைவருடனும் நெருங்கிய நட்பு கொண்டவர் மக்கள் திலகம் ஜெய்சங்கர். எம்ஜிஆர் நடித்த அன்பே வா கலரில் உருவானது.

அந்தப் படத்தில் முதலில் ஜெய்சங்கர் நடிப்பதாக இருந்தது. அவரைத் தான் ஹீரோவாகப் போடணும்னு ஏவிஎம். நினைத்தார். இதற்கிடையில் எம்ஜிஆரின் கால்ஷீட் உடனடியாகக் கிடைக்கவே அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு எம்ஜிஆரை நடிக்க வைத்தார்கள்.

அதே போல ஜெய்சங்கர் தவற விட்ட இன்னொரு முக்கியமான படம் ராமு. ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்த குழந்தையும், தெய்வமும் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனால் தனது அடுத்த படத்திலும் ஜெய்சங்கரையே ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என ஏவிஎம் நினைத்தனர்.

இந்த நிலையில்தான் ராமு என்ற ஒரு படத்தை ஏவிஎம் எடுக்கப்போவதை ஜெமினிகணேசன் அறிந்தார். உடனே அவர் மெய்யப்பச் செட்டியாரைத் தொடர்பு கொண்டு அந்தப் படத்தில் எப்படியாவது எனக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது நீ வாங்கற சம்பளம் அதிகம். நான் இந்தப் படத்தை சின்ன பட்ஜெட்ல எடுக்கலாம்னு நினைக்கிறேன்னு ஏவிஎம். சொன்னாராம். அதற்கு ஜெமினி நீங்க என்ன சம்பளம் கொடுக்குறீங்களோ கொடுங்க. ஆனா நான் தான் இந்தப் படத்தில ஹீரோவா நடிப்பேன்னு சொன்னாராம் ஜெமினி.

ஜெமினி ஏற்கனவே களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்து ஹிட் கொடுத்தவர். அதனால் அவரது பேச்சைத் தட்ட முடியாத ஏவிஎம். தன்னுடைய மகன்களிடம் அந்தப் படத்தில் ஜெய்சங்கருக்குப் பதிலாக ஜெமினிகணேசனை ஒப்பந்தம் செய்யலாம்னு சொன்னார்.

அப்பாவின் பேச்சைத் தட்ட முடியாத சரவணன், குமரனுக்கோ ஜெய்சங்கரை மாற்ற துளி கூட விருப்பமில்லை. என்றாலும் அப்பா சொன்னதை தட்டாமல் இருவரும் ஏற்றனர். அதனால்தான் ராமு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு ஜெமினிகணேசனுக்கு அமைந்தது. ஜெய்சங்கருக்கு அது மிஸ் ஆனது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment