கார்த்திக் படத்தைப் பார்த்து விட்டு சில்க்கைப் புகழ்ந்த எம்ஜிஆர்... என்ன காரணமா இருக்கும்?

by sankaran v |
கார்த்திக் படத்தைப் பார்த்து விட்டு சில்க்கைப் புகழ்ந்த எம்ஜிஆர்... என்ன காரணமா இருக்கும்?
X

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சில்க் நடித்த ஒரு படத்தில் அவரது அபாரமான நடிப்பைக் கண்டு புகழ்ந்துள்ளார் அது என்ன படம்னு தெரியுமா? கார்த்திக் படத்தைப் பார்த்து விட்டு சில்க்கைப் பாராட்டினார் என்றால் அது என்ன படமாக இருக்கும்? அப்படி என்றால் சில்க் அந்தப் படத்தில் எப்படி நடித்திருப்பார் என்ற எண்ணம் எழுகிறது அல்லவா? வாங்க பார்க்கலாம்.

தமிழ்சினிமாவின் பொற்காலம் என 80களைத் தான் சொல்வார்கள். இன்றும் தமிழ்ப்பட பாடல்கள் என்றால் 80ஸ் ஹிட்ஸ்களைத் தான் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் அப்போது எல்லா நடிகர்களின் படங்களும் ஹிட் ஆகும். கதை தான் அங்கு பேசும். அந்தவகையில் 1981ல் இரு சூப்பர்ஹிட் காதல் படங்கள் வெளியாயின. அவற்றில் ஒன்று கார்த்திக், ராதா அறிமுகமான அலைகள் ஓய்வதில்லை. இதை பாரதிராஜா இயக்கினார். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தில் தியாகராஜன், சில்க் ஸ்மிதா முக்கிய கேரக்டர்களில் நடித்து இருந்தனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் ரகங்கள்.

அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக பாரதிராஜாவிடம் மணிவண்ணன் உதவியாளராக இருந்தார். பெண்களுக்கு மிகவும் பிடித்த படங்கள். குறிப்பாக இளம் பெண்களைக் கவரக்கூடிய படங்கள் தான் இவை

அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக், ராதா இருவரும் காதலில் கசிந்து உருகி நடித்து இருப்பார்கள். படத்தில் உண்மையான காதல் ஜோடிகளாகவே வாழ்ந்து இருப்பார்கள். இந்தப் படத்தில் இன்னொரு முக்கியமான வேடம் நடிகை சில்க் ஸ்மிதா ஏற்று நடித்து இருப்பார். தியாகராஜனின் மனைவியாக படத்தில் வருவார். ராதாவின் மதம் மாறிய காதலுக்கும், தன் கணவருக்கும் இடையில் இவர் போராடும் உணர்ச்சி பூர்வமான நடிப்பு அற்புதமாக இருக்கும்.

அலைகள் ஓய்வதில்லை படத்தின் முதல் காட்சியை எம்ஜிஆர் பார்த்து விட்டு சில்க் ஸ்மிதாவின் நடிப்பை மிகவும் பாராட்டினார். இந்தப் படத்தில் சில்க் கவர்ச்சியைக் காட்டவே இல்லை. சேலை மட்டும் உடுத்தி குடும்பப்பாங்கான ரோலை ஏற்று நடித்து இருந்தார். இந்தப் படம் 200 நாள்கள் வரை ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தை ஒரே நேரத்தில் தெலுங்கிலும் வெளியிட்டார்கள். இளையராஜாவின் இசையில் ஆயிரம் தாமரை, தரிசனம் கிடைக்காதா, காதல் ஓவியம், புத்தம் புது காலை, சரிகமப, தோத்திரம் பாடியே, வாடி என் கப்ப கிழங்கே, வாழ்வெல்லாம் ஆனந்தமே, விழியில் விழுந்து ஆகிய பாடல்கள் உள்ளன.

Next Story