Categories: latest news

நீங்க சிவாஜியைத் தாக்கிப் பேசினீர்களா? நிருபரின் கேள்விக்கு நெத்தி அடி பதில் கொடுத்த எம்ஜிஆர்!

ஒரு கால கட்டத்தில் தென்னிந்திய திரைப்பட பத்திரிகையாளர்கள் எல்லாம் சேர்ந்து எம்ஜிஆருக்குப் பாராட்டு விழாவை நடத்தினர்.

அந்தப் பாராட்டு விழாவில் பேசும்போது ‘எதிர்காலத்திலே மிகையான நடிப்புக்கு வரவேற்பு இருக்காது. இயற்கையான நடிப்புக்குத் தான் வரவேற்பு இருக்கும்’ என்று எம்ஜிஆர் பேசினார். அதன்பிறகு சிவாஜிகணேசனைத் தாக்கித்தான் எம்ஜிஆர் அப்படிப் பேசிருக்காருன்னு பல பத்திரிகைகள் விமர்சிக்கத் தொடங்கின.

அதைப் பற்றி எம்ஜிஆரிடம் கேட்டபோது ‘எதிர்காலத்திலே மிகையான நடிப்புக்கு வரவேற்பு இருக்காது. இயற்கையான நடிப்புக்குத்தான் வரவேற்பு இருக்கும்னு நான் சொன்ன உடனே ஏன் சிவாஜிகணேசனை நினைவுபடுத்திக் கொள்கிறீர்கள்?

திறமையைக் களங்கப்படுத்தாதீங்க: அப்படின்னா உங்க பார்வையிலே சிவாஜிகணேசன் மிகையான நடிப்பை நடிக்கிறாரா? இப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டு என் மீது கறை பூசணும்னு நீங்க நினைச்சீங்கன்னா நீங்கதான் தோத்துப்போவீங்க. இப்படிப் பேசி அற்புதமான நடிகரான தம்பி கணேசனுடைய திறமையைக் களங்கப்படுத்தாதீங்க’ன்னு அந்த நிருபருக்குப் பதில் சொன்னார் எம்ஜிஆர்.

விட்டுக் கொடுத்ததில்லை: அந்தவகையில் எம்ஜிஆருக்கும், சிவாஜிக்கும் தொழில்முறையில் போட்டி இருந்தாலும் எந்தக்காலத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததில்லை என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு கேள்வி: சிவாஜி ஒரு சில படங்களில் மிகையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அது அந்தக் கேரக்டருக்கு மெருகூட்டும் என்பதற்காகவே இருக்கும். அதையே பத்திரிகையாளர்கள் தவறாகப் புரிந்து கொண்டு இப்படி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்கள். ஆனாலும் எம்ஜிஆர் எந்தவித டென்ஷனும் ஆகாமல் சமயோசிதமாக பதில் சொன்னது பாராட்டுதலுக்குரியது.

படங்களுக்குள் போட்டி: சிவாஜியும், எம்ஜிஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி. அந்தப் படத்தின்போது திரையரங்கில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டதால் அதன்பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என முடிவு செய்தனர். இருந்தாலும் இருவரது படங்களும் போட்டி போட்டுக் கொண்டு ரிலீஸ் ஆகும்.

நெருங்கிய நண்பர்கள்: ரசிகர்கள் வழக்கம்போல பேனர்கள், கட் அவுட்கள் என்று வைத்துக் கொண்டாடுவர். சிவாஜியின் படங்கள், எம்ஜிஆர் படங்களுக்குள் தான் போட்டி இருக்கும். ஆனால் அவர்களது தனிப்பட்ட விஷயத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒருவரை ஒருவர் எந்த தருணத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

sankaran v

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago