பாக்கியராஜிக்கு எம்ஜிஆர் சொன்ன 'நச்' அட்வைஸ்... தலைவன்னா இவருதான்யா தலைவன்!

எம்ஜிஆர் வாரிசுன்னு அறிவிச்சதுக்குப் பின்னாடியும் அரசியல்ல தீவிரமா ஈடுபடலையேங்கற வருத்தம் பாக்கியராஜிக்கு எப்பவாவது வந்துருக்கான்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பாக்கியராஜிடம் கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதிலைப் பாருங்க.
MGR உடம்புக்கு சரியில்ல: அதுக்குள்ள வரணும்னு ஆசைப்பட்டு இருந்தாதான் அந்த வருத்தம் வரும். இதே ஒரு ஆக்சிடண்ட்ல வந்தது. அவரு உடம்புக்கு சரியில்லன்னு படுக்கலைன்னா நான் அந்தப் பக்கம் வந்துருக்க மாட்டேன். உடம்புக்கு சரியில்லன்னு அவரு படுத்திருந்தபோது, என்னடா அங்க போய் படுத்துருக்காரு. அங்க வேற தேர்தலை அறிவிச்சிட்டாங்க. அவரும் தேர்தல்ல நிக்கிறாருன்னு எல்லாம் வந்துருச்சு.
இதுக்கு முன்னாடி ஒரு நிகழ்வு நடந்துச்சு. மயிலாப்பூர்ல நான் ஒரு தடவை பேசினேன். அப்போ எங்க டைரக்டர் எல்லாரும் வந்தாங்க. அப்போ நான் பேசும்போது, எம்ஜிஆர் வந்து சினிமா உலகத்துக்கு மட்டும் இல்ல. மக்களுக்காகவும் எவ்வளவோ செஞ்சிக்கிட்டு இருக்காரு.
எந்த நேரத்துல செய்யணும்?: இதுக்கு நாம பிரதிபலனா நீங்க எல்லாம் என்ன செய்யணும்னு உங்களுக்குத் தெரியும். அதை எந்த நேரத்துல செய்யணும்னு சொன்னபோது எம்ஜிஆர் வந்து 'டக்'குன்னு மைக்கைப் பிடிச்சிட்டாரு. அப்புறம் பத்திரிகையாளர்கிட்ட சொன்னாரு. இதை பத்திரிகையில போடாதீங்க. பாக்கியராஜ் அதிமுக இல்ல.
என்னோட ரசிகர் அவ்ளோதான். அவரு தெரியாம ஏதோ சொல்லிட்டாரு. அப்படின்னுட்டு வேற ஏதாவது பேசுன்னாரு. எனக்கு என்ன பேசுறதுன்னே தெரியல. மீட்டிங் முடிஞ்சதும் நீ என்னோட கார்ல வர்றன்னாரு. எங்க டைரக்டரக் கூப்பிட்டு அவரையும் கார்ல வரச்சொன்னாரு. அங்கே போனா எம்ஜிஆர் 'எதுக்கு அப்படி சொன்ன?'ன்னு கேட்டாரு.
அதிமுகவில ரசிகர்கள்: நான் ஒண்ணும் சொல்லலயே. எந்த நேரத்துல என்ன செய்யணும்னு சொன்னேன்னாரு. தப்பு. உனக்குத் தெரியுமா? அதிமுகவில எவ்ளோ ரசிகர்கள் இருக்கானோ அதைவிட அதிகமா திமுகல இருக்காங்க. எனக்குத் தெரியும். நீ வந்து என்னோட ரசிகனாகற வரை ஓகேன்னு சொல்வாங்க. நீ எனக்கு தொண்டன்னு சொன்னாலே அத்தனை பேரும் உன் படத்தை விட்டுருவாங்க. எவனுமே படத்தைப் பார்க்க மாட்டான்.
ஒரு ரசிகனைக்கூட இழந்துடக்கூடாது: அவன் மட்டும் பார்க்கறது இல்லாம பொண்டாட்டி புள்ளைகளைக் கூட படம் பார்க்க விடமாட்டான். எனக்கு அவன் ரசிகனா இருந்தவன். அவன் எப்படி வெறியோடு இருப்பான்னு தெரியும். நான் உன்னோட நிலைக்கு வர்றதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு தெரியும். நீ வந்து என்னால ஒரு ரசிகனைக்கூட இழந்துடக்கூடாது. இதுதான் யதார்த்தம். நீ எங்கயுமே பேசவே வேணாம். எனக்கு ரசிகனா மட்டுமே போகஸ் பண்ணுன்னு சொன்னார். 'என்ன பாரதி?'ன்னாரு. அவர் முழிக்கிறாரு.
அவரா கேட்பாரு?: அப்புறம் எங்க டைரக்டர் தலைவன்னா இவருதான்யா தலைவன்னாரு. யாருய்யா இப்படி சொல்வாங்கன்னு ஆச்சரியமா கேட்டாரு. அப்புறம் அவரு உடம்பு சரியில்ல. ஆஸ்பிட்டல்ல அதுவும் அமெரிக்காவுல இருக்காரு. நாம தான போய் அவருக்காக பிரசாரம் பண்ணனும். இதை எல்லாம் அவரா கேட்பாரு? போய் அவருக்கிட்டேயே நேரா சொல்லிட்டு ஆசிர்வாதம் வாங்கிட்டு வருவோம்னு முடிவு பண்ணினேன். அதுக்காக நாங்க ஒரு நாலஞ்சு பேரு அமெரிக்காவுக்குப் போனோம். அங்கு போனா ஜானகி அம்மா எம்ஜிஆருக்கிட்ட சொல்றாங்க.
எம்ஜிஆர் ஆசிர்வாதம்: உங்களுக்காக தேர்தல்ல ஆதரவு கேட்டு பேசுறேன்னு சொல்லி வந்துருக்காங்க. அவங்களை ஆசிர்வாதம் பண்ணி அனுப்பி வைங்கன்னு சொல்றாங்க. அதுக்காகத் தான் அங்கே இருந்து இங்க வந்துருக்காங்கன்னு சொன்னதும் எம்ஜிஆர் ரொம்பநேரம் யோசிச்சிட்டு அப்புறம் ஆசிர்வாதம் பண்ணி அனுப்பி வைத்தாரு. அப்படித்தான் கட்சி ஆரம்பிச்சேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.