டவுசர் பனியோடு சட்டசபை.. திருப்பதியில் வெடிமருந்து!.. எம்.ஆர்.ராதா செய்த அலப்பறை!....

by சிவா |
mr radha
X

mr radha

M.R.Radha: திரையுலகில் மிகவும் தைரியமான, மனதில் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே பேசக்கூடிய நபராக வலம் வந்தவர்தான் எம்.ஆர்.ராதா. சிறு வயதிலேயே அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி நாடக கம்பெனியில் சேர்ந்தார். அங்கே நடிப்பின் பல நுணுக்கங்களையும் கற்றுகொண்டார்.

பல வருடங்களாக நாடகங்களில் நடித்த அனுபவத்தில் தனியாக நாடக கம்பெனியும் துவங்கினார். பெரியாரை பின்பற்றி கடவுள் மறுப்பு கொள்கையை கையில் எடுத்தார். அதொடு, நாடகங்களில் பகுத்தறிவு மிக்க கருத்துக்களை பேச துவங்கினார். பிராமணர்களையும், கடவுளையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால், பல எதிர்ப்புகளையும் சந்தித்தார்.

இவர் நாடகமே நடத்தக்கூடாது என போராட்டமெல்லாம் நடக்கும். அப்போதெல்லாம், இன்று இந்த நாடகம்தான் நடக்கிறது என வேறு ஒரு தலைப்பு அறிவிப்பார் ராதா. அதைப்பார்த்துவிட்டு போராட்டம் நடத்தாமல் சென்றுவிடுவார். ஆனால், ரசிகர்கள் உள்ளே வந்தபின் அவர் எந்த நாடகத்தை நடத்த நினைத்தாரோ அதையே நடத்துவார்.

எம்.ஆர்.ராதா யாருக்கும் எப்போதும் பயந்தது இல்லை. தமிழ்நாட்டிலேயே ஒரு காஸ்ட்லியான காரை முதலில் வாங்கியர் அவர்தான். அப்போது குடியரசு தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனுக்கு அந்த கார் ஒரு விழாவுக்கு தேவைப்பட எம்.ஆர்.ராதாவிடம் கேட்டிருக்கிறார்கள். ‘இந்த கார் இந்த ராதாவுக்குதான்.. அந்த ராதாவுக்கு அல்ல’ என தைரியமாக சொன்னாதாக ஒரு செய்தி உண்டு.

எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு நீதிமன்றத்தில் நிற்கும்போது ‘உங்கள் துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருக்கிறதா?’ என நீதிபதி கேட்டப்போது ‘நான் சுட்ட எம்.ஜி.ஆரும் சாகவில்லை. என்னை நானே சுட்டுக்கொண்டேன்.. நானும் சாகவில்லை. இப்படிப்பட்ட துப்பாக்கிக்கு லைசென்ஸ் எதற்கு?’ என கேட்டவர்தான் ராதா.

எம்.ஆர்.ராதாவின் நாடகங்களை தடை செய்ய வேண்டும் என்பதற்காக அப்போதையை காங்கிரஸ் ஆட்சி நாடக தடைச்சடம் கொண்டு வந்தது. அந்த சட்ட விவாதத்திற்கு டவுசர், பனியனோடு சபை வளாகத்திற்கு போய் அதிரவிட்டார். ஒருமுறை திருப்பதி கோவிலுக்கு குண்டு வைக்க போய் வெடி மருந்தை காய வைத்து அது வெடித்து சிறு விபத்தையும் செய்திருக்கிறார். இது போல பல அதிரடியான சம்பவங்களுக்கு சொந்தக்காரர்தான் அப்போதைய ரியல் ராக்கி பாய் எம்.ஆர்.ராதா.

Next Story