மொத்த பாடலும் பிளாப்.. காரணமே எம்ஜிஆர்தான்.. இசையமைக்க மறுத்த எம்எஸ்வி

by ராம் சுதன் |

தான் இசையமைக்கும் முதல் படம் எம்ஜிஆர் என்பதால் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு எம்ஜிஆர் மீது மிகுந்த அன்பும் பாசமும் உண்டு என்றாலும் பாடல் விஷயத்தில் எந்த சமரசத்திற்கும் எப்போதும் உடன்பட்டதே இல்லை எம்.எஸ்.விஸ்வநாதன். பல சமயங்களில் எம்ஜிஆருக்கும் அவருக்கும் கருத்து மோதல்கள் வந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக எம்ஜிஆர் இருந்த காலகட்டத்திலேயே அவருக்கு எதிராக துணிச்சலான கருத்துக்களை சொல்லும் உரிமையை பெற்றிருந்தார் எம்.எஸ்.வி.

இனிமேல் எந்த மெட்ட போட்டாலும் எனக்கு முதல்ல பாடி காட்டணும். பாடல் வரி வந்த பிறகு என்னை கேட்காமல் நீ ரிக்கார்டிங் செய்யக் கூடாது என எம்ஜிஆர் எம்.எஸ்.வியிடம் கூறியிருந்தார். இதற்கு எம்.எஸ்.வி ஒன்றுமே சொல்லாமல் ஒப்புக் கொண்டார் என்றால் அதற்கு காரணம் எம்ஜிஆருக்கு பாடல்கள் மீதிருந்த ஈடுபாடு பற்றி அவருக்கு நன்றாக தெரியும். 1949 ஆம் ஆண்டிலே ஜெமினி பிக்சர்ஸ் தயாரிப்பில் அபூர்வசகோதரர்கள் திரைப்படம், 1971 ஆம் ஆண்டில் நீரும் நெருப்பும் என்ற பெயரில் மீண்டும் தயாரானது.

எம்ஜிஆர் கதா நாயகனாக நடித்த இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு இசையமைத்தவர் எஸ். ராஜ்ய. அந்தப் படத்திற்காக அவர் இசையமைத்த எல்லா பாடல்களுமே சூப்பர் வெற்றி பெற்றது. ஆனால் அதே படத்தை தமிழில் தழுவி எடுக்கப்பட்ட நீரும் நெருப்பும் படத்தின் எந்த பாடல்களுமே வெற்றிப்பெறவில்லை. இதற்கு காரணம் எம்ஜிஆரின் தலையீடுதான் என எம்.எஸ்.வி திடமாக நம்பினார்.

இந்த காலகட்டத்தில்தான் மியூஸிக்கை மையப்படுத்தி ஒரு படத்தை எம்ஜிஆரை வைத்து எடுக்க திட்டமிட்டார் ஒரு மலையாள இயக்குனர் சேது மாதவன். ஆனால் எம்ஜிஆரோ இது ஒரு மியூஸிக் படம். இதில் நான் நடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என கேட்டார். ஒரு வழியாக சேது மாதவன் எம்ஜிஆரிடம் பேசி பேசி அந்தப் படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தார். இந்தப் படம் மியூஸிக் சம்பந்தப்பட்ட படம் என்பதால் எம்.எஸ்.வி இசையமைத்தால் நன்றாக இருக்கும் என எம்ஜிஆர் சேது மாதவனிடம் கூறினார்.

உடனே சேதுமாதவன் எம்ஜிஆர் வீட்டிலிருந்து நேராக எம்.எஸ்.வி வீட்டிற்கு சென்று இந்த படத்தை பற்றி கூறி நீங்கள் தான் இசையமைக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார். உடனே எம்.எஸ்.வி தயவு செய்து என்னை மன்னிச்சுக்கோங்க. இந்தப் படத்திற்கு என்னால் இசையமைக்க முடியாது என கூறியிருக்கிறார். இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் ஹிந்தியில் வெளியான ஒரு படத்தின் ரீமேக்.

ஹிந்தியில் இந்தப் படம் பாடல்களுக்காகவே வெற்றிப்பெற்ற படம். ஒரு வேளை இந்தப் படத்தில் நான் இசையமைத்தாலும் ஹிந்திப் பாடல்களை போல் என்னுடைய பாடல்கள் இல்லை என ரசிகர்கள் சர்வ சாதாரணமாக சொல்லிவிடுவார்கள். அதுமட்டுமில்லை. எம்ஜிஆரின் குறுக்கீடும் இருக்கும். நீரும் நெருப்பும் படத்திற்கு எம்ஜிஆர் குறுக்கீடு செய்ததால்தான் அந்தப் பாடல்கள் வெற்றிபெறவில்லை. அதை போல் இந்தப் படத்திற்கு இருந்தால் என்ன செய்ய முடியும்? எம்ஜிஆருக்கு இசை மீது அதிக ஈடுபாடு இருப்பதை நான் மறுக்கவே மாட்டேன். ஆனால் அவர் தலையீடு இல்லாமல் இருந்தால் இன்னும் சிறப்பாக என்னால் இசையமைக்க முடியும் என ஒரு கட்டுரையில் எம்.எஸ்.வி கூறியிருப்பதாக இந்த தகவலை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

Next Story