நல்ல சம்பளம் கொடுத்தாரு .. ஏஆர் ரஹ்மான் இசையில் பாடியதை பெருமையாக கூறிய எம்.எஸ்.வி

எம்.எஸ்.வி எனும் பெரிய ஆளுமை: தமிழ் சினிமாவில் இசைத்துறையில் பெரிய ஜாம்பவனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்ஜிஆர், சிவாஜியின் பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் இசை. அந்த காலத்தில் இவரது இசையில்தான் பல படங்கள் வெளி வந்திருக்கின்றன. ஆனால் பெரிய ஆளுமையாக இருந்தாலும் பழகுவதற்கு ஒரு சின்ன குழந்தைத்தனமான நபர் தான் எம்.எஸ்.வி.
எப்படி பாட வேண்டும் என கேட்ட எம்.எஸ்.வி: இந்த நிலையில் ரஹ்மான் இசையில் தான் பாடிய அனுபவத்தை போன் போட்டு எஸ்.பி.பியிடம் மகிழ்ச்சியாக எம்.எஸ்.வி கூறியிருக்கிறார். அதை ஒரு பேட்டியில் எஸ்.பி.பி பகிர்ந்திருக்கிறார். இதோ எஸ்.பி,பியிடம் எம்.எஸ்.வி சொன்னது: என்ன பாடுறதுக்கு கூப்பிட்டாருய்யா அவரு.. ரொம்ப ஆனந்தமா சொன்னாரு எம்.எஸ்.வி. ஒரு சின்ன குழந்தைக்கு பொம்மை கொடுத்தா எவ்வளவு சந்தோஷப்படுமோ அப்படி ஒரு சந்தோஷத்தில் ரஹ்மான் இசையில் பாடுவதை சொன்னாரு எம்.எஸ்.வி. பாட்டு சொல்லிக் கொடுங்க தம்பினு ரஹ்மான்கிட்ட சொல்றேன். உங்களுக்கு எப்படி நான் சொல்லிக் கொடுக்கிறதுனு ரஹ்மான் கேட்டாரு.
எவ்ளோ கஷ்டம்?: அப்படிலாம் சொல்லக் கூடாது தம்பி. நான் மியூஸிக் டைரக்டராக இருக்கும் போது சொல்லிக் கொடுப்பேன். அதனால் நீங்களும் சொல்லித்தரணும்னு ரஹ்மான்கிட்ட சொன்னேன். சரி ஏதோ பாடுனாரு. இப்போதான் தெரியுது. மியூஸிக் டைரக்டர் சொல்லிக் கொடுக்கும் போது பாடுறது எவ்வளவு கஷ்டம்னு. உங்களை எவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்கிறேனும் இப்போதான் தெரியுதுனு எம்.எஸ்.வி கூறினார்.
அப்படி பாடும் போது என்ன பாடினாலும் நல்லா இருக்காதுனு சொல்றாரு தம்பி. இன்னொரு விதமா பாடுங்கனு சொல்லிக்கிட்டே இருந்தாரு. சரி என்கிட்ட இருக்கிறதை எல்லாம் அடிச்சு விட்டேன். கடைசில பாட்டு கேட்கலாமானு கேட்டா எடிட்டிங் பிறகு போட்டுக் காட்டுறேனு சொல்லிட்டாரு தம்பி. எடிட்டிங்னா என்னனு கேட்டாரு எம்.எஸ்.வி. நாம பாடும் போது ஒரே டேக்கில் முடித்து பாட்ட கேட்போம்.
புடிக்கலையோனு நினைச்சேன்: நான் நினைச்சேன். நாம பாடினது ரஹ்மானுக்கு புடிக்கல போல. அதனால்தான் நமக்கு போட்டு காட்டல போலனு நினைச்சேன். ஆனால் இப்போது எடிட்டிங் அது இதுனு சொல்றாரு. ஆனால் நல்ல சம்பளம் கொடுத்தாரு தம்பி. காலைக் கூட தொட்டு கும்பிட்டாரு. சரி ஒரு சமயம் ரேடியோவில் பாட்ட கேட்டா நான் பாடியதா இது என்பதை போல் இருந்தது. எடிட்டிங்கில் பிரம்மாதப்படுத்திட்டாரு தம்பி. நான் கூட பெரிய சிங்கர் ஆகிட்டேனோ என்ற அளவுக்கு என்னை சந்தோஷப்படுத்திட்டாரு தம்பி.
இதை எஸ்.பி,பி சொல்லும் போது எம்.எஸ்.வி இதை என்கிட்ட போன் பண்ணி சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் சந்தோஷத்தில் சொன்னாரு. எப்பேற்பட்ட லெஜெண்ட். எதையும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டார். தான் ஒரு பெரிய இசையமைப்பாளர் என்ற கர்வம் இருக்காது. ஆனால் ரஹ்மானை பொறுத்தவரைக்கும் நாம் நன்றாக ஒரு சுருதியில் பாடினாலும் ‘இது நல்லா இருக்கு. இதையும் நான் வைத்துக் கொள்கிறேன். ஆனால் நான் நினைச்ச மாதிரியும் பாடி விடுங்களேன்’ என்று சொல்வார்.