விஜயுடன் நடிக்க மறுத்த நடிகை.. கடைசியில் டான்ஸ்னா சும்மாவா? நிரூபித்த தளபதி

by ராம் சுதன் |
விஜயுடன் நடிக்க மறுத்த நடிகை.. கடைசியில் டான்ஸ்னா சும்மாவா? நிரூபித்த தளபதி
X

தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் உச்சம் தொட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் எத்தனையோ விமர்சனங்கள் அவர் மீது எறியப்பட்டன. அதை எல்லாம் தன் மீது விழப்பட்ட கற்கள் என்று நினைக்காமல் தனது வெற்றியை நோக்கி தான் எடுத்து வைக்க உதவும் படிக்கற்கள் என நினைத்துக் கொண்டார் விஜய். அந்த விமர்சனங்கள் தான் அவரை இந்த அளவு உயரத்தில் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது.

எந்த பத்திரிகைகள் தன்னை உருவ கேலி செய்தார்களோ ஏளனமாக கிண்டல் செய்தார்களோ அவர்களே இன்று வியக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் விஜய். சினிமாவிலும் ஜெயித்து இப்போது அரசியலிலும் ஜெயிக்க அடுத்த கட்ட பணியை தொடர்ந்து இருக்கிறார். தனியாக கட்சி ஒன்றை ஆரம்பித்து தன் கட்சியின் கீழ் தொண்டர்களையும் நிலையாக நிறுத்தி அரசியல் சார்ந்த பணிகளையும் செய்து கொண்டு வருகிறார்.

இவருடைய ஒவ்வொரு அரசியல் நகர்வும் மற்ற கட்சி பிரபலங்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தனியாக கட்சி ஆரம்பித்து பெரிய அளவில் மாநாட்டையும் கூட்டி இரண்டு முறை பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்ட விஜய் ஒருமுறை கூட பத்திரிகையாளர்கள் சந்திப்பை நிகழ்த்தவில்லை. அதுவே ஒரு பெரிய பேசுப் பொருளாக மாறி இருக்கிறது. ஆனால் அது எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தன்னுடைய ஸ்டைலே வேற என்ற வகையில் புதுவிதமான அரசியல் பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் விஜய்.

இந்த நிலையில் அவருடன் நடிக்க மறுத்த ஒரு நடிகை பற்றிய தகவல் இப்போது வைரலாகி வருகின்றது. விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தமிழன் .அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். ஆனால் முதலில் பிரியங்கா சோப்ரா அந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொள்ள வில்லையாம். ஆனால் அவரது தந்தை எப்படியாவது தன் மகள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார் .

தன் தந்தைக்காக அந்த படத்தில் நடித்தாராம் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு விஜயின் நடனத்தை பார்த்து பிரியங்கா சோப்ரா அதிசயத்து விட்டாராம் .விஜய் என்றாலே ஒரு பக்கம் அவருடைய குரலில் ஒரு பாடல், இன்னொரு பக்கம் அந்த படத்தில் அவருடைய டான்ஸ். இது இரண்டுமே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும். டான்ஸ் என்றாலே விஜய் தான் என்ற அளவுக்கு பட்டையை கிளப்புவார் விஜய்.

அதைப்போல தமிழன் படத்திலும் விஜய்யுடன் பிரியங்கா சோப்ராவுக்கு நடனம் ஆடுவது மிகவும் கடினமாக இருந்திருக்கிறது .ஆனாலும் அவர் நடனம் கற்றுக் கொள்ளும் வரை விஜய் மிகவும் பொறுமையாக இருந்தாராம். இதனாலேயே விஜய் மீது பிரியங்காவுக்கு ரொம்பவே மரியாதை இருந்து வந்ததாக அவருடைய அம்மா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story