ரஜினி ஏன் வேகமாகப் பேசுறாருன்னு தெரியுமா? கணிப்புலயும் புலிதான்யா..! பிரபலம் சொல்லும் ஆச்சரியங்கள்

ரஜினிக்கு இது திரையுலகில் பொன்விழா ஆண்டு. இதையொட்டி அவருடனான நினைவுகளை தயாரிப்பாளர் முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க. எல்லாருக்குமே உதவி செய்யக்கூடிய கேரக்டர் ரஜினி. அடுத்தவங்க மனசைப் புரிஞ்சிக்கிட்டு அவங்களுக்கு என்ன தேவைன்னு தெரிஞ்சிக்குவார். அதை எப்படி கண்டுபிடிக்கிறாருன்னு தெரியல.
மாறுவேடத்துல படம் பார்ப்பார்: ரஜினியும், கமலும் நிறைய படங்களைப் பார்ப்பாங்க. கர்நாடகாவில் இன்னைக்குக் கூட சிவராஜ்குமார் படமோ, புனித்ராஜ்குமார் படமோ மாறுவேடத்துல பார்ப்பார். பெங்களூரு போனாலும், டெல்லி போனாலும் படம் பார்ப்பார்.
பிங்கர் டிப்ஸ்: இந்த சீன்ல இந்த ஷாட்ல ஜனங்க கைதட்டுவாங்க என்பதை அவ்ளோ அழகா ரஜினி கணிச்சி வைச்சிருக்காரு. ஸ்ரீதரே ஆச்சரியப்பட்டாரு. ஒரு படத்துல லெப்ட் ஹேண்ட்ல ரஜினி பெரிய பேனாவுல ஏதோ எழுதும்போது என்னடா இதுன்னு நினைச்சாரு.
இல்ல சார் இந்த ஷாட் வைங்க. ஜனங்க கைதட்டுவாங்கன்னாரு. அதே மாதிரி கிளாப்ஸ். என்னடா இந்த ஆளு எல்லாத்தையும் பிங்கர் டிப்ஸ்ல வச்சிருக்கான்யான்னாரு. இந்த வயசுலயும் தன்னோட ஏஜ்க்கு ஏற்ற மாதிரி கேரக்டர் பண்றாருன்னா அது எவ்ளோ பெரிய ஆச்சரியம்.
பில்லா படம் ரிலீஸ் ஆகி நல்லா ஓடுனதும் நாம ரீமேக் பண்ணலாம்னு நினைச்சோம். விஸ்வநாத் என்ற இந்திப்படத்துல சத்ருகன்சின்ஹா நடிச்சிருந்தாரு. அதுல பர்ஸ்ட் ரெண்டு மூணு சீனுதான் நல்லாருந்தது. மற்றபடி போர் அடிச்சுது. அது பெரியப்பாவுக்குப் பிடிக்கல. ஏன்னா அவர்தான் தயாரிக்கிறதா இருந்தது.
நான் மகான் அல்ல: அப்பாவும், பெரியப்பாவும் ரஜினியும் பேசினாங்க. அப்போ ரஜினி சார் உங்களுக்குப் பிடிச்சிருக்கு. தயாரிப்பாளருக்குப் பிடிக்கல போலன்னு அவரோட ரியாக்ஷனைப் பார்த்தே சொல்லிட்டாரு. அப்புறம் அதை விட்டுட்டாரு. ஆனாலும் அந்தப் படத்தை விடல. அதுதான் அப்புறமா நான் மகான் அல்ல படம் ஆனது. ஏன்னா சத்ருகன்சின்ஹா அவரோட பேவரைட் ஆக்டர்.
வெற்றிக்குக் காரணம்: ரஜினியோட மூன்று முகமும் எங்களுக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தது. அவரோட வெற்றிக்குக் காரணம் சின்சியாரிட்டி, டெடிகேஷன், ஆடியன்ஸ பல்ஸ் பார்க்குறவர். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் இவங்க தான் ஆடியன்ஸோட பல்ஸ் பார்க்குறவங்க.
வேகமாகப் பேசுவது: அவங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு கணிச்சி நடிக்கிறவங்க. அதனாலதான் அவங்க ஜெயிச்சாங்க. ரஜினிக்கு ஆரம்பத்தில் கன்னட ஸ்லாங்க் இருந்தது. அது தெரியக்கூடாதுங்கறதுக்காக வேக வேகமாகப் பேசுவார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.