சிவாஜியிடம் அந்தக் குணம்... தயாரிப்பாளர் வியந்து சொன்ன தகவல்!

by சிவா |
சிவாஜியிடம் அந்தக் குணம்... தயாரிப்பாளர் வியந்து சொன்ன தகவல்!
X

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தமிழ்த்திரை உலகில் நடிப்புச் சக்கரவர்த்தி என்றும் அவர் நடிப்பு அகராதி என்றும் சொல்வார்கள். அவர் திரையில் எத்தகைய கதாபாத்திரங்களாக இருந்தாலும் அசால்டாக நடித்து அப்ளாஸ் வாங்குவார். ஆனால் நிஜத்தில் அவர் அவ்வளவு தன்மையானவர். பண்பானவர். எளிமையானவர். அதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

சீதா லட்சுமி ஆர்ட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சித்ரா லட்சுமணனும் எனது சகோதரரான சித்ரா ராமுவும் இணைந்து தயாரித்த படம் ஜல்லிக்கட்டு. இந்தப் படத்தின் கதாநாயகன் சிவாஜியோடு பல சுவையான அனுபவங்களை சந்தித்துள்ளார். அதுபற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

100வது நாள் விழா: ஜல்லிக்கட்டு படத்தின் 100வது நாள் விழாவில் கலந்து கொண்டது மட்டுமின்றி அந்தப் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் பலருக்கும் ஷீல்டு வாங்கிக் கௌரவித்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அந்த விழாவுக்கான அழைப்பிதழை அச்சடிக்கும்போது முதல் பக்கம் எம்ஜிஆர். அடுத்த பக்கம் சிவாஜி. அதற்கு அடுத்த பக்கம் சத்யராஜ் என்று இருந்தது.

படித்துப் பார்த்த சிவாஜி: விழாவுக்கான அழைப்பிதழை சிவாஜியிடம் கொடுக்கச் சென்றபோது முதல் பக்கத்துல சிவாஜி படம் வருவது மாதிரியும், அடுத்த பக்கத்துல எம்ஜிஆர் படம் வருவது மாதிரியும் மடித்துக் கொடுத்தார். அந்த அழைப்பிதழைப் படித்துப் பார்த்தார் சிவாஜி. படித்து முடித்ததும் எங்கிட்ட திருப்பிக் கொடுக்கும்போது எப்படி ஒரிஜினல்ல இருந்ததோ அது மாதிரி எம்ஜிஆர் படம் முதல்ல வருற மாதிரி மடிச்சிக் கொடுப்பார்.

மனதிலே நிற்கிறது: என் மனசையும் காயப்படுத்தாம நான் இதுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்னு சிவாஜி சொல்லாம சொன்ன அந்த சேதி இருக்கே அது இன்று வரை என் மனதிலே நிற்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். சிவாஜி போன்று பழகுவதற்கு எளிமையான மனிதரை இந்தத் திரையுலகம் சந்திக்கப் போவதில்லை என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு: 1987ல் மணிவண்ணன் இயக்கத்தில் சிவாஜி, சத்யராஜ், ராதா, நம்பியார், ஜனகராஜ் உள்பட பலர் நடித்த படம் ஜல்லிக்கட்டு. இளையராஜா இசை அமைத்துள்ளார். ஹே ராஜா, காதல் கிளியே, கத்திச் சண்டை, ஏரியில் ஒரு, எத்தனையோ ஆகிய பாடல்கள் உள்ளன.

Next Story