சனியன்.. சொல்றத ஒழுங்கா செய்யாது.. கமல் திட்டிய அந்த பிரபல நடிகை

Published on: March 18, 2025
---Advertisement---

படப்பிடிப்பில் நடக்கும் சம்பவம்: பெரும்பாலும் சினிமாவில் எத்தனையோ மறக்க முடியாத சம்பவங்கள் நினைவுகள் நடப்பதுண்டு. படப்பிடிப்பில் கலாட்டா சண்டை என அதைப்பற்றி வருடங்கள் கழித்து பேசுகிறோம் என்றால் அதில் சில சமயங்களில் சுவாரசியமாக மாறி இருக்கக் கூடும். ஆனால் அதையே நினைத்து சக நடிகர்களிடம் கோபித்துக் கொள்வதோ பேசாமல் இருப்பதோ என யாருமே இருந்ததில்லை.

லோ பிரஷர்: சில வருடங்கள் கழித்து அதைப் பற்றி பல பேட்டிகளில் அவர்கள் கூறும் பொழுது அதை தங்களுடைய மலரும் நினைவுகளாக பேசி சந்தோசப்பட்டு சொல்கின்றனர். அந்த வகையில் கமலை பற்றி நடிகை ராதிகா கூறியது பெரிதும் சுவாரஸ்யமானதாக கருதப்படுகிறது. அதாவது ராதிகாவை பொருத்தவரைக்கும் அவருக்கு லோ பிரஷர் பிரச்சனை இருக்கிறதாம்.

அதனால் அடிக்கடி மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுவாராம். அப்படி ஒரு சமயம் ராதிகாவிடம் கமல் இன்று ஷூட்டிங்கிற்கு டிமிக்கி கொடுக்க வேண்டும். அதனால் எனக்காக இன்று மயக்கம் வருவது போல நடி என சொல்லி இருக்கிறார். அதற்கு ராதிகா அதெல்லாம் முடியாது. நான் பண்ண மாட்டேன் என கூறியிருக்கிறார் .கமல் எவ்வளவோ சொல்லியும் ராதிகா கேட்கவில்லையாம்.

கோபப்பட்ட கமல்:உடனே செல்லமாக கோபித்துக் கொண்டு கமல் சென்றுவிட்டாராம். அதன் பிறகு ஒரு ஐந்து நாள் கழித்து இருவரும் படப்பிடிப்பில் இருக்கும் பொழுது திடீரென ராதிகா மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டாராம். கண்ணை விழித்து பார்த்ததும் அவர் கண்முன்னே கமல் தான் தெரிந்தாராம். உடனே கமல் ராதிகாவை பார்த்து ‘சனியன் எப்ப மயக்கம் போட சொன்னா எப்ப வந்து போடுது பாரு’ என்று சொன்னாராம்.

அவர் சொன்னதற்கான காரணம் அதன் பிறகு தான் ராதிகாவிற்கு புரிந்திருக்கிறது. இதை ஒரு பேட்டியில் ராதிகா கூறினார். இதைப் பற்றி நடிகை ஸ்ரீபிரியாவும் கூறும்பொழுது கமல் கேடிக்கு கேடி என கூறியிருந்தார் .கமலும் ராதிகாவும் இணைந்து பேர் சொல்லும் பிள்ளை ,சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களில் நடித்திருக்கின்றனர். பேர் சொல்லும் பிள்ளை படத்தில் மிகவும் ஜாலியான கேரக்டராக ராதிகா நடித்திருப்பார்.

ரஜினியையும் கிண்டலடித்த கமல்:அவர் பொதுவாகவே ஆன் ஸ்கிரீன் மற்றும் ஆப் ஸ்கிரீன் இரண்டிலுமே மிகவும் கலகலப்பான ஒரு நடிகை. ரஜினியையே அவர் கிண்டல் செய்து இருக்கிறார் .ஏதோ ஒரு பார்ட்டிக்கு ரஜினி வரும்பொழுது ரப்பர் செருப்பை அணிந்து கொண்டு வந்தாராம். உடனே ராதிகா நீங்க பெரிய நடிகராக இருக்கலாம். அதுக்கு ஏன் இப்படி ரப்பர் செருப்பை போட்டுட்டு வந்து இருக்கீங்க என கிண்டலாக கேட்டாராம் ராதிகா. அதிலிருந்து ராதிகாவை பார்த்தாலே ரஜினி உடனே தன்னுடைய செருப்பை தான் சரிபார்த்து கொள்வாராம். இப்படி ஏகப்பட்ட நடிகர்களை ராதிகா கிண்டல் பண்ணியது உண்டு.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment