சமீபத்தில் நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். இது திரையுலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. கன்னிப்பருவத்திலே படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜேஷ் பின்னாளில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் ஜொலித்தார்.
ஆசிரியராக 7 ஆண்டுகள் பணிபுரிந்த ராஜேஷ்சுக்கு சினிமாவில் அளவுகடந்த ஆர்வம். அதனால் அந்த வேலையில் இருந்து சினிமாவுக்குத் தாவியுள்ளார். ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்ட அவர் அதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் இருந்து பிசினஸ்சுக்குப் போன ராஜேஷிடம் கமல் மற்றும் பாரதிராஜா என்ன சொன்னார்கள்? இதுகுறித்து மறைந்த நடிகர் ராஜேஷ் முன்னர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். என்னதான் சொன்னாருன்னு பாருங்க.
கமல் சொன்னாரு. அருமையா நடிச்சிக்கிட்டு இருக்கீங்க. இந்த நேரத்துல ஏன் பிசினஸ் போறீங்கன்னு கேட்டார். ஒரு நல்ல நடிகனை திரையுலகம் இழக்கிறது என்று சொன்னார். யாருக்கிட்டேயும் போய் சுகமில்லன்னு கையேந்தறதோ, இல்ல எனக்கு வாய்ப்பு கொடுன்னு கேட்குறதோ இதெல்லாம் கிடையாது. எவன் ஒருவன் அடுத்தவனை துதி பாடுகிறானோ அவன் தன்னம்பிக்கை இல்லாதவன். தன்னம்பிக்கை உள்ளவன் துதி பாட மாட்டான். உன்னோட திறமையை நான் ஃபுல்லா சொல்றதுங்கறது உங்களைத் துதி பாடுறது இல்ல. நான் யாரையும் துதி பாட மாட்டேன்.
திறமை இருந்தால் புகழ்ந்து சொல்வேன். அதுக்காக எல்லாரையும் இந்திரன், சந்திரன் மாதிரி புகழ்றது கிடையாது. பாரதிராஜா சொன்னது தான் கரெக்ட். என்ன சொன்னாருன்னா, யோவ் நான் நடிக்க வந்தேன்யா. நான் டைரக்டர் ஆகிட்டேன்யா. புரொடியூசர் ஆகிட்டேன்.
அதே மாதிரி நீ வந்து நடிக்க வந்தே. வாத்தியார் வேலை பார்த்தே. இப்ப ரியல் எஸ்டேட் பண்றே. எது பிக்கப் ஆகுதோ, காசு தான்யா முக்கியம்னாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ராஜேஷ், பாக்கியராஜ் உடன் இணைந்து நடித்த அந்த 7 நாள்கள் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அவருக்கும் அந்தப் படம் நல்ல பேரு வாங்கிக் கொடுத்தது. ரியல் எஸ்டேட் பிசினஸிலும் கூட அந்தப் படத்தில் நடித்த கேரக்டரை வைத்துத் தான் ராஜேஷூக்கு பிசினஸ் படுஜோராகப் போனதாம். இதை அவரே பாக்கியராஜிடமும் தெரிவித்தாராம்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…