நான் ஒன்னும் அஜித்தோ ரஜினியோ இல்ல.. என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு ராஜ்கிரண்

by ராம் சுதன் |

ராஜ்கிரனை பொறுத்த வரைக்கும் வில்லனாக நடிக்க பல படங்களில் அவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் வில்லனாக நடிக்க மாட்டேன் என ஒரேடியாக மறுத்துவிட்டார் ராஜ்கிரன். அதற்கு காரணம் நான் ஒன்னும் நடிகன் கிடையாது வில்லனாக நடிப்பதற்கு என்பது போல ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இதோ அவர் அதற்கான காரணத்தை கூறிய விவரம் தான் இது .தவமாய் தவமிருந்து படத்திற்கு பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருமே என்னை அப்பா அப்பா என்று தான் அழைக்க ஆரம்பித்தார்கள்.

ராஜ்கிரண் என்றாலே சென்டிமென்ட் இருக்க வேண்டும். ஆக்சன் இருக்க வேண்டும் .அந்த எதிர்பார்ப்பு தான் இருக்கும் .ஆனால் தவமாய் தவமிருந்து படத்திற்கு பிறகு அந்த ஆக்ஷன் காட்சிகளை எல்லாம் மீறி நான் வெளியில் எங்கு போனாலும் ரசிகர்கள் அனைவரும் அவர்களுடைய அறியாமையை மீறி அப்பா என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி அனைவரும் அப்பா என்று நினைக்கும் பொழுது நான் வில்லனாக நடித்தால் எவன் போய் பார்ப்பான்.

அது அந்த கதைக்கு அந்த படத்துக்கு மைனஸ் ஆக போய்விடும். அது மட்டுமல்ல நான் நடிகன் இல்லை. கமல் மாதிரி, விஜய் மாதிரி, விக்ரம் மாதிரி ,நாசர் மாதிரி, சூர்யா மாதிரி, அஜித் மாதிரி இவர்களைப் போல் நடிப்பே உயிர் மூச்சு என்று வாழுபவன் நான் இல்லை. நான் நடிக்கிற படங்கள் ஹிட்டாவதற்கு காரணம் என்னவெனில் என்னுடைய சுய தன்மை என்னவாக இருக்கோ அதற்கு தகுந்த மாதிரி கதைகள் கதாபாத்திரங்கள் வந்தால் என்னுடைய சுயம் வெளியே வரும்.

அதனால் நான் நடிக்கிற மாதிரி தோன்றுகிறது. நான் நடிக்கிறது நன்றாக இருக்கிறது என சொல்கிறார்கள். என்னை நல்ல நடிகன் என்று சொல்கிறார்கள். இதுதான் காரணமே தவிர நடிப்பை பற்றி ஆனா ஆவன்னா எதுவுமே எனக்குத் தெரியாது. நடிப்பில் கர கண்டவர்களால் மட்டும்தான் வில்லனாக நடிக்க முடியும். ஏனெனில் வில்லனாக ‘நடிக்க’ வேண்டும் .அது எனக்கு வராது என ராஜ்கிரண் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அவர் சொன்னதை போல் அவர் ஹீரோவாக நடித்த படங்களை பார்த்தோம் என்றால் அளவுக்கதிகமாக செண்டிமெண்ட் இருக்கும். அதற்கு இணையான ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கும். அவருடைய ஒவ்வொரு ஃபைட்டும் சும்மா இடி மாதிரி விழும். அவருடைய சண்டைக்காட்சிகளுக்கு என தனி ரசிகர்களே இருக்கிறார்கள். ஆழ் மனதில் ராஜ்கிரண் என்றால் இப்படித்தான் என ரசிகர்களும் நினைத்திருக்கிறார்கள். அதனால் வில்லனாக நடித்தாலும் எடுபடாது என்பதுதான் உண்மை.

Next Story