Categories: latest news

ஒன்பதே நாளில் ரஜினி நடித்துக் கொடுத்த படம்… வில்லனா நடிச்சாலும் படம் சும்மா அள்ளுதே..!

ரஜினிகாந்த் இப்போ எல்லாம் 1 படத்துல நடிக்க 100 நாள், 200நாள்னு கால்ஷீட் கொடுக்குறாரு. 90களில் 30 நாள், 60 நாள்னு கொடுத்தாரு. குரு சிஷ்யன் படத்துக்கு 18 நாள்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து முடிச்சிக் கொடுத்துருக்காரு.

இதுக்கெல்லாம் ஒருபடி மேல வெறும் 9 நாள்கள் மட்டுமே தேதி கொடுத்து அதுல ஹீரோவுக்கு இணையான வில்லன் வேடத்தில் நடித்து அதுவும் சூப்பர்ஹிட் ஆகியிருக்கு. அது என்ன சம்பவம்னு பார்க்கலாமா…

வி.சி.குகநாதன்: 70களின் இறுதியில் ரஜினி பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருந்தார். அந்த சமயத்துல டைரக்டர் வி.சி.குகநாதன் மாங்குடி மைனர் என்ற படத்தை எடுக்க முயற்சி பண்றாரு. அந்தப் படத்தோட தயாரிப்பாளர் கிடைச்சதும் கதை, திரைக்கதை எழுதி நடிகர்களைத் தேர்வு செய்கிறார்.

ரஜினி ரொம்ப பிசி: ஹீரோவாக விஜயகுமாரைத் தேர்வு செய்துவிட்டார். ஆனா வில்லனா நடிக்கணும்னா அது வெயிட்டான கேரக்டர். நல்ல நடிகர் வேணும்னு நினைத்து சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் பேசுகிறார்.

அந்த சமயத்துல ரஜினி ரொம்பவே பிசி. இரவு பகலா நடிச்சிக்கிட்டு இருந்தார். அதனால டைரக்டர்கிட்ட ‘எங்கிட்ட இப்போ கால்ஷீட்டுக்கான தேதி இல்ல. 2 வருஷம் கழிச்சித்தான் தேதி கிடைக்கும். அப்போ எடுக்குறீங்களா..’ன்னு கேட்டாராம்.

குகநாதனோ ‘இல்ல. நான் ஏற்கனவே கன்பார்ம் பண்ணிட்டேன். அதுல எல்லாரையும் செலக்ட் பண்ணிட்டேன். படத்தை உடனடியா ஆரம்பிக்க வேண்டியதுதான். இதுல வில்லன் கேரக்டர் ரொம்ப அழுத்தமானது. நீங்க நடிச்சா தான் நல்லாருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

9 நாள்கள்: அப்போ ரஜினியோ ‘நான் ஆன்மிகப் பயணம் போவதற்காக அதுக்கு முன்னாடி 9 நாள்கள் என்னோட கால்ஷீட் தேதியில் இருந்து ஒரு கேப் வச்சிருக்கேன். அந்த 9 நாள்களுக்குள் எனக்கான சீனை எடுக்க முடியுமா’ன்னு கேட்டுள்ளார். ‘அதுக்கு நான் 100 சதவீத ஒத்துழைப்பு தரத் தயார்’ என்று சொன்னதும் டைரக்டர் அதை ஒரு சவாலாக எடுத்துக்கிட்டு செய்தார்.

இந்திப் பட ரீமேக்: அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாவற்றையும் சரியாகத் திட்டமிட்டு ரஜினியோட காட்சிகளை எடுக்கிறார். அப்போ ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை ரஜினி நடித்துக் கொடுத்தாராம். அந்தக் காலகட்டத்தில் இது பெரிய சாதனையாகவே பேசப்பட்டது. இந்தப் படம் அப்போது சூப்பர்ஹிட் ஆனது. குறிப்பா ரஜினியோட நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்புக்குள்ளானது. இது இந்திப் படத்தின் ரீமேக்.

மாங்குடி மைனர்: 1978ல் வி.சி.குகநாதன் இயக்கிய படம் மாங்குடி மைனர். விஜயகுமார், ரஜினி, ஸ்ரீபிரியா, எம்.என்.ராஜம், சகுந்தலா, எஸ்வி.ராமதாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்திரபோஸ் இசை அமைத்துள்ளார். படத்தின் டயலாக்குகள் ரொம்பவே கிளாஸாக இருந்ததால் ரசிகர்களுக்கு ரஜினி பேசும் டயலாக்குகள் எல்லாம் பிடித்துப் போனது. ஒரு காட்சியில் ராமனை விட ராவணனன்தான் ஜென்டில்மேன்னு சொல்வது அப்ளாஸை அள்ளியது.

sankaran v

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

6 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

7 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

7 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

7 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

10 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

11 hours ago