சூப்பர்ஸ்டாரையே பயமுறுத்திய ராமராஜன்... அதுபற்றி மக்கள் நாயகன் என்ன சொல்றாருன்னு பாருங்க...

by sankaran v |
சூப்பர்ஸ்டாரையே பயமுறுத்திய ராமராஜன்... அதுபற்றி மக்கள் நாயகன் என்ன சொல்றாருன்னு பாருங்க...
X

தமிழ்சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இன்று வரை வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது படங்களை ஆறிலிருந்து 60 வயது வரை உள்ள ரசிகர்களும் ரசிப்பார்கள். அந்த வகையில் ரஜினிக்கு இப்போது வயதானாலும்கூட அந்த அழகும் ஸ்டைலும் மாறவே இல்ல. இன்னும் அப்படியே இருக்குன்னு படத்துல வர்ற டயலாக் போல அசத்திக் கொண்டு வருகிறார்.

தற்போதும் இளம் நடிகர்களுக்குப் போட்டியாக இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதே வேகம். அதே சுறுசுறுப்பு என ரஜினி நடிப்பது இன்னும் பிரமிப்பாகவே உள்ளது. அப்படிப்பட்ட ரஜினிக்கே ஒரு முறை கிலி கொடுத்துள்ளார் ராமராஜன். அது பற்றி பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்றாருன்னு பாருங்க...

ரஜினிகாந்தைப் பற்றி ஒரு தடவை ராமராஜன் சொல்லிக்கிட்டு இருந்தாரு. ஒரு தடவை கமல், ரஜினி, கார்த்திக், பிரபு எல்லாரும் பீக்ல இருக்கும்போது ரஜினியைத் தாண்டி ராமராஜன் சம்பளம் வாங்கிட்டாரு. அந்த நேரம் இவரைப் பேட்டி எடுக்குறவங்க நீங்க ரஜினியையே பயமுறுத்தினீங்களாமேன்னு கேட்குறாங்க.

அப்போ ராமராஜன் பதில் சொல்றாரு. ஒரு வகுப்புல ஒரு மாணவன் தொடர்ந்து பர்ஸ்ட் ரேங்க் எடுத்துக்கிட்டு வர்றான். இன்னொரு பையன் செகண்ட் ரேங்க் எடுத்துக்கிட்டு வர்றான். திடீர்னு செகண்ட் ரேங்க் எடுக்குறவன் பர்ஸ்ட் ரேங்க் எடுக்குறான். அப்படி அவன் பர்ஸ்ட் ரேங்க் எடுத்துட்டான்னா ஏற்கனவே பர்ஸ்ட் ரேங்க் எடுத்துக்கிட்டு இருந்தவனுக்கு ஒரு பயம் வந்துடும்.

என்னன்னா அவங்க அப்பா கூப்பிட்டுத் திட்டுவாங்க. அடிப்பாங்க. ஏன்டா உனக்கு அடுத்த ரேங்க் வாங்கினவன் இன்னைக்கு உன் ரேங்குக்கு வந்துட்டான்னு திட்டுவாங்க. அந்த மாதிரி பயம் ரஜினிக்கும் கண்டிப்பா இருந்தது. அது ஒண்ணும் தவிர்க்கவே முடியாது.

ஏன்னா அந்த இடத்தை அப்படியே வச்சிக்கிட்டு வர்றாரு பாருங்க. அந்த இடத்தில் யாராக இருந்தாலும் பயம் வரத்தான் செய்யும். அதைத்தாண்டி 90கள்ல இது நடந்தது. அதன்பிறகு என்னுடைய சினிமா கெரியர் எப்படி இருந்ததுன்னு உங்களுக்கு எல்லாம் தெரியும். முடிஞ்சிப் போச்சு.

ஆனாலும் இன்றைக்கும் லைம் லைட்ல இருக்கக்கூடியவர் வந்து ரஜினிகாந்த் தான். இன்னைக்கும் நான் பார்த்தன்னா சூட்டிங் போறதா இருக்கட்டும். ஏர்போர்ட் போகறதா இருக்கட்டும். ஒரு நிகழ்ச்சிக்கு வர்றதா இருக்கட்டும்னு ஓபனா சொன்னாரு ராமராஜன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அந்த சுறுசுறுப்பு மாறல. இத்தனை வயசுல. அது உண்மையிலேயே காட் கிப்ட். அது ரசிகர்களோட அருள்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story