நேருக்கு நேர் படத்திலிருந்து அஜித் விலகியதற்கு காரணம் லவ்தான்!.. வெளிவராத தகவல்!...

Ajithkumar: அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அஜித். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பைக் ஓட்டுவது, பைக் ரேஸில் கலந்துகொள்வது போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அமராவதி படத்தில் நடித்து வாங்கிய முதல் சம்பளத்தில் தனக்கு பிடித்த பைக் ஒன்றையே அவர் வாங்கினார்.
பைக் மற்றும் கார் ஓட்டுவதில் இருக்கும் ஆர்வம் அஜித்துக்கு இப்போதுவரை தொடர்கிறது. துபாயில் கார் ரேஸை முடித்துவிட்டு ஐரோப்பாவில் உள்ள ரேஸில் கலந்துகொண்டு வருகிறார். இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை அவருக்கு ரேஸ் இருக்கிறது. ஏற்கனவே விடாமுயற்சி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் வருகிற ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் வெளியாகவுள்ளது.
விஜய் அரசியலுக்கு போய்விட்ட நிலையில் அஜித்தே கோலிவுட்டில் பெரிய ஹீரோவாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தும் விஜயும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் ராஜாவின் பார்வையிலே. அதன்பின் வஸந்தின் இயக்கத்தில் நேருக்கு நேர் படத்தில் இவரும் இணைந்து நடித்தனர். 10 நாட்கள் ஷூட்டிங்கும் நடந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த படத்திலிருந்து அஜித் வெளியேறிவிட அவருக்கு பதில் சூர்யா நடித்தார். இந்த படம் மூலம்தான் சூர்யா அறிமுகமானார்.
இந்நிலையில்தான் அஜித் ஏன் அப்படத்திலிருந்து வெளியேறினார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. முதலில் வஸந்த் படமெடுக்கும் விதமே அஜித்துக்கு பிடிக்கவில்லை. ஏனெனில், இவ்வளவு நாள் உங்களின் கால்ஷீட் என சொல்லி அதில் படமெடுக்கும் இயக்குனர் அவர் இல்லை. அவருக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது எடுப்பார். இது அஜித்துக்கு பிடிக்கவில்லை.
அடுத்து அப்போது அஜித் நடிகை ஹீராவை காதலித்து வந்துள்ளார். ஆனால், அஜித்தின் காதலை எற்பதில் ஹீராவுக்கு சில சிக்கல் இருந்திருக்கிறது. எனவே, அஜித் அப்செட்டில் இருந்திருக்கிறார். அதோடு, நேருக்கு நேர் படத்தை தயாரித்தது மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம். ஒருநாள் அஜித்தை பார்க்க மணிரத்னம் வர சொல்ல ‘2 மணிக்கு வருகிறேன்’ என சொன்ன அஜித் அந்த நேரத்திற்கு போகவில்ல. 4 மணி வரை காத்திருந்த மணிரத்னம் வஸந்துக்கு போனை போட்டு ‘இந்த படத்தில் அஜித் வேண்டாம். வேறு ஹீரோவை வைத்து எடுங்கள்’ என சொல்லிவிட்டதாகவும் ஒரு செய்தி இருக்கிறது. இப்படி பல காரணங்களால்தான் நேருக்கு நேர் படத்திலிருந்து அஜித் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.