மூணு வருஷமா தாடி வச்சி நடிச்சி வீணாப்போச்சே!.. புலம்பும் ரோபோ சங்கர்!..

சின்னத்திரையில் மிமிக்கிரி, ஸ்டேஜ் ஷோ என தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் ரோபோ சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசனில் தொடங்கி இப்போது பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வருகிறார் ரோபோ சங்கர். படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். இடையில் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மிகவும் வேதனையிலும் இருந்தார் ரோபோ சங்கர். அதன் பிறகு ஏகப்பட்ட போராட்டங்களை தாண்டி இன்று நல்ல உடல் நலமுடன் இருக்கிறார். சமீபத்தில் தான் அவருடைய மகள் இந்திரஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் அவருடைய சினிமா அனுபவத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறியது தற்போது வைரல் ஆகி வருகின்றது. அவர் முதன்முதலில் வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலமாகத்தான் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். ஆனால் அதற்கு முன்பே ஜீவா நடிப்பில் வெளியான ரௌத்திரம் படத்தில் தான் நடித்தாராம் .அந்த படத்தின் இயக்குனர் கோகுல். ரோபோ சங்கருக்கும் கோகுலுக்கும் நெருக்கமான ஒரு நட்பு இருந்திருக்கிறது. ரௌத்திரம் படத்திற்காக கிட்டத்தட்ட மூன்று வருஷம் தாடியுடன் இருந்தாராம் ரோபோ சங்கர்.
இதனால் வெளி ஷோக்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பகால ஸ்டேஜ் என்பதால் மிகவும் பொருளாதார ரீதியாகவும் சங்கடப்பட்டு இருந்திருக்கிறார். இருந்தாலும் முதல் படம். இயக்குனர் சொல்லிவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக மூன்று வருடமாக தாடியுடனே சுற்றி இருக்கிறார். அதன் பிறகு நாளை படம் ரிலீஸ் ஆகும் நிலையில் முந்தைய நாள் ஒரு ஷோ பண்ணுவதற்காக மேடை ஏறும் போது இயக்குனர் கோகுலிடம் இருந்து போன் வந்ததாம்.
நாளைக்கு படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால் படத்தில் நீங்கள் சம்பந்தப்பட்ட எந்த சீனும் இல்லை. வேறு வழியில்லாமல் படத்தின் நீளம் கருதி உங்கள் சீன்களை எடிட்டிங்கில் கட் பண்ண வேண்டியதாகி விட்டது. என்னால் எதுவும் பண்ண முடியவில்லை என கூறினாராம் கோகுல். இதை கேட்டதும் ரோபோ சங்கருக்கு நடுக்கமே வந்துவிட்டதாம். ஏனெனில் முதல் படம். கிட்டத்தட்ட மூன்று வருடமாக காத்திருந்து அந்த படத்திற்காகவே தாடி வைத்து மூன்று வருடமாக சுற்றிக்கொண்டிருந்தார். திடீரென இயக்குனர் இப்படி சொன்னதும் அவர் அன்று பண்ண வேண்டி இருந்த அந்த ஷோ கூட முழுமையாக பண்ண முடியவில்லை .
நேராக வீட்டுக்கு வந்திருக்கிறார். அவருடைய மாமனார் இந்த படத்தை பற்றி கேட்டபோது நடந்த அத்தனை சம்பவங்களையும் கூறினாராம் ரோபோ சங்கர். அந்த நேரத்தில் இயக்குனர் கோகுலுக்கு திருமணம் என்று அவர் பத்திரிகையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தாராம் .கோகுலை தன் மாமனாரிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ரோபோ சங்கர் .உடனே ரோபோ சங்கரின் மாமனார் கோகுலை பார்த்து உன்ன தான் தேடிக்கிட்டு இருக்கேன் .மூன்று வருடமா ஒருத்தன காக்க வச்சு இப்படி ஏமாற்றி விட்டீர்களே.
இது நல்லா இருக்கா. ஏதாவது ஒரு சீன் கூட படத்தில் வைத்திருக்கலாமே என இயக்குனரை திட்டி தீர்த்து விட்டாராம் ரோபோ சங்கரின் மாமனார். அதன் பிறகு வாயை மூடி பேசவும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து இன்று ஒரு தவிர்க்க முடியாத நடிகராக ரோபோ சங்கர் மாறி இருக்கிறார்