Categories: latest news

விஜய் அஜித் நடிக்க வேண்டிய படமா அது? உள்ள வந்து குட்டையை குழப்பி கடைசில என்னாச்சு தெரியுமா?

மாஸ் ஹீரோக்கள்: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். சம காலத்தில் இருவரும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து சினிமாவில் தனி முத்திரை பதித்தனர். இருவருக்குள்ளுமே நல்ல ஒரு நட்பும் இருந்து வருகிறது. தொழில் முனையில் இவர்களுக்குள் கடுமையான போட்டியும் நிலவி வருகிறது. அதே சமயம் இருவருக்குமே ரசிகர் பட்டாளம் ஏராளம். விஜய் அஜித் படங்களுக்கு இதுவரை நல்ல ஓப்பனிங் இருந்து வருகிறது.

எத்தனை படங்கள் மிஸ்ஸானது?: சினிமாவை பொறுத்தவரைக்கும் இந்தப் படங்கள் இவருக்காக எழுதியதுதான் என்று எதுவுமே கிடையாது. நினைத்த ஹீரோக்கள் வேறு யாராவது இருப்பார்கள். ஆனால் படத்தில் நடித்தது வேறு ஹீரோக்களாவது இருப்பார்கள். அப்படி அஜித் விஜய் நடிக்க வேண்டிய படங்கள் நிறைய மிஸ் ஆகியிருக்கின்றன. அந்த வகையில் சசி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் அறிமுகமான திரைப்படமான ரோஜாக்கூட்டம் திரைப்படம் முதலில் விஜய் அஜித் நடிக்க வேண்டியதாம்.

விஜய் அஜித் நடிக்க வேண்டியதா?:ஆரம்பத்தில் இந்தப் படத்தை டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படமாக எடுக்கத்தான் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் அந்த நேரத்தில் விஜய் அஜித் இருவருமே மிகவும் பிஸியான நடிகர்களாக இருந்ததனால் அவர்களால் நடிக்க முடியாமல் போனதாம். அதன் பிறகு அஜித் நடிக்க வேண்டிய கேரக்டரில் ஜெய் ஆகாஷும் விஜய் நடிக்க வேண்டிய கேரக்டரில் ஸ்ரீகாந்தும்தான் நடித்தார்களாம்.

டபுள் ஹீரோ சப்ஜெக்ட்: இருந்தாலும் ஜெய் ஆகாஷ் தெலுங்கில் கொஞ்சம் பிஸியாக இருந்ததனால் ரோஜாக்கூட்டம் திரைப்படத்தில் கவனம் செலுத்த முடியவில்லையாம். அதனால் இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷின் கேரக்டரை குறைத்து ஸ்ரீகாந்த் கேரக்டரை மட்டும் லீடாக காண்பித்திருக்கிறார்கள். இல்லையென்றால் இந்தப் படம் கண்டிப்பாக டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படமாகத்தான் வந்திருக்கும் என ஜெய் ஆகாஷ் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் அலைபாயுதே படத்திலும் முதலில் ஜெய் ஆகாஷ்தான் நடிக்க வேண்டியதாம். அதற்கான ஆடிசனிலும் ஜெய் ஆகாஷ் கலந்து கொண்டாராம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதாக ஜெய் ஆகாஷ் கூறினார். இதையெல்லாம் தாண்டி வேடிக்கையான விஷயம் என்னவெனில் இதே போல் கிட்டத்தட்ட 40 திரைப்படங்களின் வாய்ப்பை மிஸ் செய்திருக்கிறாராம் ஜெய் ஆகாஷ்.

ராம் சுதன்

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

8 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

9 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

16 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

17 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

18 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago