Categories: latest news

ரஜினி படத்தை தூக்கிட்டு என் படத்தை போட்டாங்க!.. சமுத்திரக்கனி சொல்றதை கேளுங்க!..

Samuthirakani: பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்தவர் சமுத்திரக்கனி. அண்ணி உள்ளிட்ட சில சீரியல்களை இயக்கினார். சினிமாவில் நுழைந்த பின் சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டார். எனவே, தான் இயக்கும் படங்களில் அது போன்ற வசனங்களையும், காட்சிகளையும் வைத்தார்.

நாடோடிகள், போராளி, வினோதய சித்தம் உள்ளிட்ட பல படங்களையும் இயக்கியுள்ளார். நடிகர் சசிக்குமாருக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவருடன் பல படங்களிலும் நடித்திருக்கிறார். சசிக்குமார் இயக்கி நடித்த சுப்பிரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்தார். சாட்டை போன்ற படங்களில் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் நினைத்தால் மாற்றத்தை கொண்டுவர முடியும் என காட்டினார்.

சமுத்திரக்கனி படம் என்றாலே அதில் சமுதாயத்திற்கு தேவையான கருத்து இருக்கும் என்கிற இமேஜ் அவர் மீது உண்டானது. கடந்த சில வருடங்களாகவே முழுநேர நடிகராக மாறிவிட்டார். வில்லன், குணச்சித்திரம் என கலக்கி வருகிறார். தமிழ் மட்டுமின்றி பல தெலுங்கு மொழிகளிலும் படங்களில் நடித்துவருகிறார்.

இப்போதெல்லாம் பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் சமுத்திரக்கனி இருக்கிறார். ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி பொங்கலுக்கு வெளியான கேம் சேஞ்சர் படத்திலும் நடித்திருந்தார். ஒருபக்கம், கதையின் நாயகனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த மாதம் கூட அவரின் நடிப்பில் உருவான திரு.மாணிக்கம் என்கிற படம் வெளியானது.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சமுத்திரக்கனி ‘என்னுடைய அப்பா படம் ரிலீஸாகி ஒரு வாரத்தில் கபாலி படம் ரிலீஸ். எனவே, எல்லா தியேட்டர்களிலும் அப்பா படத்தை தூக்கிவிட்டு அந்த படத்தை போட்டுவிட்டார்கள். சென்னை அபிராமி தியேட்டரில் கபாலி வெளியாகி 3 நாட்கள் கழித்து அதாவது திங்கள் கிழமை மீண்டும் அப்பா படத்தை போட்டார்கள்.

இதைக்கேள்விப்பட்டு அபிராமிநாதன் சாருக்கு போன் செய்து நன்றி சொன்னேன். அவரோ ‘நீ ஏன் நன்றி சொல்கிறாய். டிக்கட் கவுண்டரில் பலரும் அப்பா படத்திற்கு டிக்கெட் கேட்டார்கள். என் மனசாட்சி என்னை உறுத்தியது. அதனால்தான் கபாலியை தூக்கிவிட்டு அந்த படத்தை போட்டேன் என சொன்னார். ஒரு நல்ல படம் அதை செய்யும்’ என பேசியிருந்தார்.

Published by
சிவா