வாய்ப்பு கொடுத்தவருக்கே பட்டை நாமம் போட்ட சத்யராஜ்.. என்ன ரியல் அமாவாசையா?!

நடிகர் சத்யராஜ் ஆரம்பத்தில் பல படங்களில் வில்லனாக வந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்தார். ஹீரோவானதும் அவர் படங்கள் சூப்பர்ஹிட் ஆனது. அவர் ஆரம்பத்தில் எப்படி வாய்ப்புக்காக கஷ்டப்பட்டார்? அதன்பிறகு வாய்ப்பு கொடுத்தவருக்கே எப்படி விபூதி அடித்தார்னு பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சொல்கிறார்.
தீர்ப்புகள் திருத்தப்படலாம்: 1982ல அப்பா (எம்.பாஸ்கர்) சிவக்குமாரை வைத்துத் தீர்ப்புகள் திருத்தப்படலாம்னு ஒரு படம் எடுக்கிறாரு. அதுல வில்லன் ரோலுக்காக நடிகரைத் தேடிக்கிட்டு இருக்காரு. அப்போ சிவக்குமார் சார் வந்து எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான்.
சொந்தக்காரன் பையன்தான் சார். அவனை வரச் சொல்றேன். பாருங்கன்னு ரெகமண்ட் பண்றாரு. அப்புறம் சத்யராஜ் வந்து அப்பாவைப் பார்க்க வர்றாரு. ரொம்ப ஹைட். நல்ல கலரா இருக்காரு. ஸ்மார்ட்டா இருக்காரு. அவரைப் பார்த்ததும் எல்லாம் சரி தம்பி. ஆனா ஹைட் தான் பிராப்ளம்னு சொல்றாரு. தொடர்ந்து சார் எப்படியாவது இந்தப் படத்துல ஒரு சின்ன ரோலாவது கொடுங்கன்னு கேட்கிறார்.
ஸ்மார்ட்டா இருக்கான்: சரிப்பா. நீ போயிட்டு வா. நான் பார்த்துக்கறேன்னு அப்பா சொல்றாரு. அப்புறம் சிவக்குமார் சாருக்கிட்ட பேசுறாரு. என்னப்பா நீ அனுப்பின ஆளு? நல்ல ஸ்மார்ட்டா இருக்கான். ரொம்ப ஹைட்டா இருக்கான். ஆனா நீ ஷார்ட்டா இருக்கே. நான் எப்படி பிரேமுக்குள்ள வைக்கிறதுன்னு கேட்கிறார்.
அப்புறம் சிவக்குமார் சாரும் உங்களுக்குத் தெரியாதா சார்? எத்தனை சினிமாவுல சீட் பண்ணி எடுக்கிறாங்க. நீங்க நினைச்சாவாய்ப்பு தரலாம்னு சொல்றாரு. சரி விடுப்பா. நான் சொல்லிட்டேன். வாய்ப்பு கொடுக்குறேன்னு சொல்றாரு அப்பா. சிவக்குமார் சார் சத்யராஜிக்கிட் போன் பண்ணி நீ ஃபாலோ பண்ணிக்கப்பான்னு சொல்றாரு. அடிக்கடி அப்பாவைப் பார்க்க வருவாரு.
ஹீரோவா ஆகிட்டாரு: சான்ஸ் வேற இருந்தா சொல்லுங்கன்னு சொல்வாரு. அப்பாவுக்கும், அவருக்கும் நல்ல ரிலேஷன்ஷிப் ஆச்சு. அப்புறம் அவரும் நிறைய படங்கள் நடிச்சி லைம் லைட்டுக்கு வந்துட்டாரு. கமல், ரஜினி படங்களுக்கு வில்லனா நடிச்சி ஃபேமஸ் ஆகிட்டாரு. அப்புறம் சாவி படத்துல இருந்து ஹீரோவா ஆகிட்டாரு.
அந்த நேரம் ஜல்லிக்கட்டுன்னு ஒரு படம் நடிக்கிறார். அதுல இயக்குனர் மணிவண்ணன். அப்போ அப்பா சத்யராஜ் மேனேஜருக்கு போன் பண்றாரு. அப்போ முட்டுக்காட்டுல சூட்டிங்ஸ்பாட். அங்கே போய் அப்பா பார்க்கப் போறார். அப்போ 'படம் பண்ணலாமா'ன்னு கேட்கிறார்.
அதுக்கு 'தப்பா நினைச்சிக்காதீங்க சார். நான் ஒரு 3 வருஷத்துக்குப் பிசி'ன்னு சொல்றாரு. அப்படியாப்பான்னு கேட்டுட்டு அப்பாவும் வந்துட்டாரு. உடனே என்ன கோவிச்சிட்டு போறாரேன்னு மணிவண்ணனும் பேசிப் பார்த்தார். 'நான் வேணா 6 மாசத்துல டேட் வாங்கித்தாரேன்'னாரு.
மதிக்கிறதே இல்லை...: ஆனா அதுக்கு அப்பா 'எனக்குப் பிடிக்கல. 3 வருஷம்னு எப்படி சொல்லலாம்?'னு கோபமா வந்துட்டாரு. அட்வான்ஸோடு தான் போனாரு. ஆனா திரும்ப வந்துட்டாரு. ஆரம்பத்துல அவருக்கு மார்க்கெட் இல்லாத போது அப்பா வாய்ப்பு கொடுத்தார். எந்த நடிகரும் ஆரம்பத்துல தனக்கு சப்போர்ட் பண்ணின எந்த இயக்குனரையும், தயாரிப்பாளரையும் வளர்ந்ததுக்கு அப்புறம் மதிக்கிறதே இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.