காலை 4.30 மணியிலிருந்து.. இளையராஜா லைஃப் ஸ்டைலை கேட்டால் ஆச்சரியப்படுவீங்க..

by ராம் சுதன் |
காலை 4.30 மணியிலிருந்து.. இளையராஜா லைஃப் ஸ்டைலை கேட்டால் ஆச்சரியப்படுவீங்க..
X

இசைஞானி இளையராஜா: இன்று சினிமாவில் இசையில் பெரும் ஜாம்பவானாக இருப்பவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 50 வருடகாலமாக இசைத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர். லட்சக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் இளையராஜா லைஃப் ஸ்டைல் குறித்து அவரின் உதவியாளர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அன்றாடம் அவர் செய்யும் வேலைகள் என்ன? எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது போன்ற முக்கியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

அம்மனுக்கு முக்கியத்துவம்: இளையராஜா எப்பொழுதும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்துவிடுவாராம். எழுந்ததுமே பூஜை செய்வதைத்தான் முதல் வேலையாக வைத்திருக்கிறாராம். வெளியூர் ஷூட்டிங் என்றால் அரை மணி நேரம் பூஜை செய்வாராம். இதே உள்ளூரில் என்றால் வீட்டில் ஒரு மணி நேரம் கண்டிப்பாக பூஜை செய்வாராம். பெரும்பாலும் அம்மன் புகைப்படங்களைத்தான் பூஜை அறையில் வைத்திருப்பாராம். அதில் மூகாம்பிகை அம்மனைத்தான் மிகவும் பிடிக்குமாம்.

அம்மா மீது பாசம்: காரில் கூட மூகாம்பிகை அம்மன் புகைப்படம்தான் இருக்கிறதாம்.காரில் உடன் யாராவது பயணித்தார்கள் என்றால் பேசிக் கொண்டே வருவது அவருக்கு பிடிக்காதாம். ஏனெனில் காரில் பயணிக்கும் போது மந்திரங்களை சொல்லிக் கொண்டேதான் வருவாராம். பூஜை அறையில் அவரின் அம்மா புகைப்படத்தையும் வைத்துதான் வணங்குகிறாராம் இளையராஜா.

புதுமையான நடைபயிற்சி: ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இளையராஜாவின் வாழ்க்கை ஸ்டைலே மாறியிருக்கிறதாம் .எளியவர்கள் யாரும் கடைப்பிடிக்க முடியாத வகையில் அவருடைய லைஃப் ஸ்டைல் மாறிவிட்டதாம். சாதாரணமாக நடைபயிற்சி மேற்கொள்வது அன்றாட தேவைகளில் ஒன்றாகிவிட்டது. ஆனால் இளையராஜா ஸ்டூடியோவிற்குள்ளேயே நடந்து கொண்டே இருப்பாராம். ஒரு நாளைக்கு அதிக தூரம் நடப்பது இளையாராஜாவாகத்தான் இருக்குமாம்.

காலை 7 மணிக்கு ஸ்டூடியோவில்தான் காலை சாப்பாடு இருக்குமாம். ஆனால் ஸ்டூடியோவிற்கு வரும் போது பஞ்சு அருணாச்சலம் வீட்டை கிராஸ் செய்துதான் எப்பொழுதும் வருவாராம். வேறு ரூட்டில் வழி இருந்தாலும் பஞ்சு அருணாச்சலத்தின் வீட்டை பார்த்து விட்டு வரணும் என்பதற்காகவே பஞ்சு அருணாச்சலம் வீட்டின் வழியாகத்தான் வருவாராம். பிரசாத் ஸ்டூடியோவில்தான் இவரின் ராஜ்ஜியமே நடக்கும்.

ஒரு முறை ஸ்டூடியோவிற்குள் நுழைந்துவிட்டால் பிற வேலைகளில் ஈடுபடவே மாட்டாராம். ஏன் காலை மாற்றிக் கூட உட்கார மாட்டாராம். அந்தளவுக்கு அவரின் கவனம் ஹார்மோனியம் மீதுதான் இருக்குமாம். சில சமயங்களில் கவிஞர்களுக்கு நேரம் இல்லையென்றால் இளையராஜாவே நிறைய பாடல்களை எழுதி கம்போஸ் செய்துவிடுவாராம். நோட்ஸ் எழுதிக் கொடுத்துவிடுவாராம். பின் ஃபைனல் ஸ்டேஜ்ல வந்துதான் இசை எப்படி வந்திருக்கிறது என செக் பண்ணுவாராம் இளையராஜா.

Next Story