இயக்குனர் சொன்ன கதையை கேட்டு காரி துப்பிய சிம்பு!.. அந்த படத்துக்கு இப்படி ஒரு பிளாஷ்பேக்கா!….

Published on: March 18, 2025
---Advertisement---

Actor Simbu: தனது அப்பா டி.ராஜேந்தரால் சின்ன வயதிலேயே சினிமாவில் நுழைந்தவர்தான் சிம்பு. ரஜினியை பின்பற்றி அவரைப் போலவே ஸ்டைல் செய்தார். அதோடு, அவருக்கு லிட்டில் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தையும் டி.ஆர் கொடுத்தார். காதல் அழிவதில்லை என்கிற படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

அதன்பின் பல படங்களிலும் நடித்தார். துவக்கத்தில் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக பில்டப் செய்து கொண்டார் சிம்பு. இதனால் இவருக்கென ரசிகர் கூட்டமும் உருவானது. காதல் கலந்த ஆக்சன் கதைகளில் நடித்து மார்க்கெட்டை தக்க வைத்தார். அவ்வப்போது சில நல்ல படங்களிலும் நடிப்பார்.

சிம்புவுக்கு பின் வந்த தனுஷ் அவரை தாண்டி சென்ற நிலையில் தனது நடவடிக்கைகளால் பெயரை கெடுத்துக்கொண்டார் சிம்பு. படப்பிடிப்புக்கு சரியாக போகாமல் கெட்ட பெயர் வாங்கினார். இதனால், பல இயக்குனர்களின் கோபத்திற்கு ஆளானார். சில படங்களுக்கு சரியான ஒத்துழைப்பை கொடுக்காததால் அந்த படங்கள் தோல்வி அடைந்தன.

எனவே, சிம்பு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என சிலர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் கொடுத்தனர். கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை தாண்டி வருவாயா, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். அதன்பின் வெளியான சில படங்கள் வெற்றிபெறவில்லை.

மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அடுத்து, பார்க்கிங் பட இயக்குனர் அருண்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதன்பின் அவரின் 50வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். சரித்திர பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளது. அடுத்து டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் சுசீந்தரன் ‘நான் ஏற்கனவே இயக்கிய ஒரு படத்தின் பெயரை சொல்லி அது போல எனக்கும் ஒரு படம் எடுங்கள் என சிம்பு என்னிடம் கேட்டார். நான் ஜெய்க்காக எழுதி வைத்திருந்த ஈஸ்வரன் கதையை அவரிடம் சொன்னேன். அந்த கதையை கேட்டு அவர் துப்பிவிட்டார். பின்பு சிம்புவுக்காக கதையில் சில மாற்றங்களை செய்து ஈஸ்வரன் படத்தை இயக்கினேன்’ என பேசியிருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment